Gold : 83,000-யை நெருங்கியது தங்கம் : புதிய உச்சத்தில் வெள்ளி விலை

Gold Silver Rate Today in Chennai : தங்கம் மற்றும் வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டு, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Gold Silver Rate Today in Chennai
Gold Silver Rate Today in Chennai
1 min read

தங்கம் விலை அதிகரிப்பு :

Gold Silver Rate Today in Chennai : சர்வதேச நிலவரங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, அமெரிக்காவில் வரிப்போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை இன்றும் புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது.

நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு, 60 ரூபாய் உயர்ந்து, 10,290 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 480 ரூபாய் அதிகரித்து, 82,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.

சவரனுக்கு ரூ.560 உயர்வு :

இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.82,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,360க்கு(Gold Rate Per Gram Today) விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டு நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

24 காரட் தங்கம் (தூய தங்கம்) :

நேற்று ஒரு கிராம் ரூ.11,226 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.76 அதிகரித்து ரூ.11,302 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.89,632 ஆக இருந்த நிலையில், ரூ.608 அதிகரித்து ரூ.90,416 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் :

ஒரு கிராம் ரூ.8,520 ஆக இருந்த நிலையில், ரூ.60 அதிகரித்து ரூ.8,580 ஆகவும், சவரனுக்கு ரூ.68,160 ஆக இருந்த தங்கம் விலை ரூ.480 அதிகரித்து ரூ.68,640 ஆகவும் விற்பனையாகிறது.

5 நாட்களில் தங்கம் விலை (ஒரு கிராம்) நிலவரம் :

செப்டம்பர் 22 ( இன்று ) - ரூ.10,360

செப்டம்பர் 21 - ரூ. 10,290

செப்டம்பர் 20 - ரூ. 10,290

செப்டம்பர் 19 - ரூ. 10,230

செப்டம்பர் 18 - ரூ.10,220

வெள்ளி விலையும் புதிய உச்சம் :

வெள்ளி விலையும் ஒரு கிலோ ஒன்றரை லட்சத்தை தொட இருக்கிறது.

சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.148க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ 1,48,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

மேலும் படிக்க : Sovereign Gold Bonds: 5 ஆண்டுகளில் 108% லாபம் : மக்கள் வரவேற்பு

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in