கிராமப்புற வங்கிகள்,13,217 காலிபணியிடங்கள்:டிகிரி இருந்தால் போதும்

Tamil Nadu Grama Bank Recruitment 2025 : தேசிய அளவில் கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Tamil Nadu Grama Bank Recruitment 2025
Tamil Nadu Grama Bank Recruitment 2025
2 min read

கிராம வங்கிகளில் வேலைவாய்ப்பு :

IBPS RRB Recruitment 2025 Notification : தேசிய அளவில் கிராமப்புற வங்கிகளில் காலி பணியிடங்கள், வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) மூலம் நிரப்பப்படுகிறது. இந்த வங்கிகளில் 13,217 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் தொடங்கி இருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள்(Tamil Nadu Grama Bank Recruitment 2025 Vacancy) உள்ளன. பல்வேறு கல்வித்தகுதி கொண்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க தேவையான விவரங்களை அறிந்து கொள்வோம்.

பணியிட விவரங்கள் :

குரூப்- A கீழ் Scale-I, II மற்றும் III அதிகாரிகள், குரூப்-B கீழ் அலுவலக உதவியாளர் (Multipurpose) ஆகிய பதவிகள் நிரப்பப்படுகின்றன. இதில் அலுவலக உதவியாளர் பதவிக்கு 7 ஆயிரத்திற்கு அதிகமான காலிப்பணியிடங்களும், அதிகாரி பதவிக்கு 5 ஆயிரத்திற்கு அதிகமான பணியிடங்களும் உள்ளன.

பதவியின் பெயர் - காலிப்பணியிடங்கள் :

* அலுவலக உதவியாளர் -7,972

* அதிகாரி (Scale-I) - 3,907

* அதிகாரி (Scale-II) - 1,139

* அதிகாரி (Scale-III) - 199

* மொத்தம்------------ - 13,217

வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 1ம் தேதியின்படி, அலுவலக உதவியாளர் பதவிக்கு 18 முதல் 28 வரை இருக்க வேண்டும்(Tamil Nadu Grama Bank Job Age Limit). விண்ணப்பதார்கள் 02.09.1997 முன்னரும், 01.09.2007 பின்னரும் பிறந்திருக்க கூடாது.

அதிகாரி பதவியில் Scale-I பணியிடங்களுக்கு 18 முதல் 30 வரை இருக்கலாம். 02.09.1995 முன்னரும் 01.09.2007 பின்னரும் பிறந்திருக்க கூடாது.

அதிகாரி பதவியில் Scale-II பணியிடங்களுக்கு 21 முதல் 32 வயது வரை இருக்கலாம். 02.09.1993 முன்னரும் 01.09.2004 பின்னரும் பிறந்திருக்க கூடாது.

அதிகாரி பதவியில் Scale-III பதவிக்கு 21 முதல் 40 வயது வரை இருக்கலாம். 02.09.1985 முன்னரும் 01.09.2004 தேதிக்கு பின்னரும் பிறந்திருக்க கூடாது.

மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு இருக்கும்.

கல்வித்தகுதி :

கல்வித்தகுதி செப்டம்பர் 21-ம் தேதியின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அலுவலக உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும்(Tamil Nadu Grama Bank Job Qualification). கணினி திறன் தேவை. அனுபவம் தேவையில்லை.

அதிகாரி Scale-I பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரி, தமிழ் மற்றும் கணினி திறன் அவசியம். இருப்பினும், வேளாண் சார்ந்த படிப்புகள், தகவல் தொழில்நுட்பம், மேனேஜ்மெண்ட், சட்டம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனுபவம் அவசியமில்லை.

அதிகாரி Scale-II பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரியுடன் 2 ஆண்டுகள் வங்கி அல்லது நிதி சார்ந்த நிறுவன அனுபவம் தேவை. வங்கி, நிதி, வேளாண், கூட்டுறவு, தகவல் தொழில்நுட்பம், மேனேஜ்மெண்ட், சட்டம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் பாடப்பிரிவுகள் கொண்டு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 1 ஆண்டு அனுபவம் தேவை.

அதிகாரி Scale-III பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டபப்டிப்புடன் 5 ஆண்டு அனுபவம் தேவை.

தேர்வு செய்யப்படும் முறை :

கிராமப்புற வங்கிகளில் உள்ள இப்பணியிடங்களின் தேர்வு முறை பதவிக்கு ஏற்ப மாறுபடும். அந்த வகையில், அலுவலக உதவியாளர் பதவிக்கு முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது.

அதிகாரி (Scale-I) பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் நடத்தப்படும். அதிகாரி (Scale-II, III) பதவிக்கு ஒரே கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும்.

மேலும் படிக்க : மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு : டிகிரி இருந்தால் போதும்

விண்ணப்பிக்கும் முறை

வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக செப்டம்பர் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்(IBPS Job Apply Online Date). விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.175 செலுத்த வேண்டும். செப்டம்பர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.

==========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in