
கடுமையாக உழைக்கும் தூய்மை பணியாளர்கள் :
Chennai Sanitation Workers Protest Day 8 : சென்னை மாநகராட்சியில், மண்டல வாரியாக குப்பைகளை அள்ளுதல், தெருக்களை தூய்மைப்படுத்துதல் ஆகிய பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் இவர்கள் வேலை பார்த்து வருவது வேதனைக்குரிய விஷயம்.
தனியார் வசம் தூய்மை பணிகள் :
சென்னை மாநகராட்சியின் 11 மண்டலங்களில், தனியார் நிறுவனங்கள் மூலமாக தூய்மை பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 மண்டலங்களில், 11 மண்டலங்களுக்கு மட்டும்தான் இந்த நிலை. மீதமிருக்கும் 4 மண்டலங்களில் மாநகராட்சியின் ஒப்பந்த தொழிலாளர்களாக, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த பணியாளர்களுக்கு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின்படி, 22,950 ரூபாய் ஊதியமாக கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தனியாரை நாடும் திமுக அரசு :
ஆகஸ்ட் 1ம் தேதி முதலாக ராயபுரம், திருவிக நகர் ஆகிய 2 மண்டலங்களீன் தூய்மை பணிகளும் தனியார் வசம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அண்ணானகர் உள்ளிட்ட பகுதிகளையும், தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருவதாக தூய்மை பணியாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
வேலையாட்களின் ஊதியம் பறிக்கப்படும். :
தூய்மை பணிகள் தனியார் வசம் சென்றால், வேலை பார்ப்பவர்களுக்கு ஊதியமாக ரூ.16,950 மட்டும் வழங்கப்படும் என்பது தூய்மை பணியாளர்களின் கூற்றாக இருக்கிறது. இதனால், தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், தங்களை பணி நிரந்தரம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தூய்மை பணியாளர்ள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த சென்னை மேயர் பிரியா, ஏற்கனவே 10 மண்டலங்களில் தூய்மை பணிகள் தனியார் வசம் இருப்பதாகவும், 5,6வது மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க : தூய்மை பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதி : அன்புமணி கேள்வி
பெருகும் குப்பை, மக்கள் அவதி :
ஆனால் அவரது கூற்றை ஏற்க மறுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள், அவர்களின் போராட்டம் 8வது நாளாக நீடிக்கிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பை கூளங்கள் தேங்கி வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. போராட்டக்காரர்களுடன் இதுவரை மாநகராட்சி அதிகாரிகளோ, மேயரோ பேச்சுவார்தைத எதையும் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
=====