
தென்மேற்கு பருவமழை :
IMD Alerts Heavy Rainfall in September 2025 : இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக பெய்து வருகிறது. காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள், வட மாநிலங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. மேக வெடிப்பு காரணமாக சில மணி நேரத்தில் அதிகமாக மழை பெய்வதால், வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு(Red Alert) ஏற்பட்டு உள்ளது.
தென் மாநிலங்களிலும் பலத்த மழை :
தென் மாநிலங்களான(Heavy Rain in Southern States) கேரளா, கர்நாடகா, தெலங்கானாவில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கர்நாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழகத்திலும் கூடுதல் மழைப்பொழிவு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கிறது. சென்னையில் 2 நாட்களாக இரவில் இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்துள்ளது.
செப்டம்பரில் கூடுதல் மழை :
இந்தநிலையில், செப்டம்பர் மாதத்திற்கான மழைப்பொழிவை இந்திய வானிலை மையம்(September Weather 2025) கணித்துள்ளது. அதன்படி, வழக்கமான நீண்ட கால சராசரியை விட 109% அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான அளவை விட அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : வெள்ளத்தில் மிதக்கும் ‘Mumbai’ : வரலாறு காணாத மழை, மக்கள் அவதி
வட மாநிலங்களுக்கு வெள்ள எச்சரிக்கை :
மேற்கு மற்றும் இமயமலைப் பகுதிகளில் பெய்யும் அதிக மழை காரணமாக, உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது(Flood Alert in Northern States). ஏற்கனவே, ஆகஸ்ட் மாதம் பெய்த பலத்த மழையால் இந்த மாநிலங்களில் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றன.
செப்டம்பர் மாதத்தில் பெய்யும் மழை, விவசாயத்திற்கு சாதகமாக இருந்தாலும், ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சவாலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
=========