தொடரும் போர் பதற்றம்
HCL allows work from home due to Fuel Shortage : தொடரும் ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போர் சூழல் காரணமாக கச்ச எண்ணெய் ஏற்றுமதியில் பாதிப்பானது ஏற்பட்டிருக்கும் நிலையில் எரிபொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் சமையல் எரிவாயு பயன்பாட்டிலும் பெரும் தட்டுப்பட்டானது ஏற்பட்டிருக்கிறது.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு : மூடப்பட்ட உணவகங்கள்
தொடரும் போர் எதிரொளியல கச்ச எண்ணெய் பாதிப்பானது ஏற்பட்டிற்குக்கும் நிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு பெரிதளவில் ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் உணவகங்களானது மூடப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவகங்களை மூடுவதாகவும் உண்வு பட்டியல்களை குறைப்பதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க : IEA : ஈரான் போர், எண்ணெய் விநியோகம் சரிவு : தினமும் 80 லட்சம் பீப்பாய் தேக்கம் : வளரும் நாடுகளுக்கு பாதிப்பு
தட்டுப்பாடு எதிரொலி WFH அறிவித்த HCL நிறுவனம்
இந்நிலையில் HCL டெக் ஐ.டி. நிறுவனத்தின் சென்னை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அந்நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
நிலைமை சீராகும் வரை அவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்றும், ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளை நிறுவனம் வழங்கும் என்றும் எச்சிஎல் டெக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.