”திராவிட வெற்றிக் கழகம்” : புதிய கட்சி தொடங்கினார் மல்லை சத்யா

Mallai Sathya New Party Dravida Vetri Kazhagam : மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார்.
Mallai Sathya, who expelled from MDMK, has started  new party called Dravida Vetri Kazhagam
Mallai Sathya, who expelled from MDMK, has started new party called Dravida Vetri KazhagamGoogle
1 min read

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா

Mallai Sathya New Party Dravida Vetri Kazhagam : மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வலது கரமாகவும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும் இருந்தவர் மல்லை சத்யா. வைகோவின் மகன் துரை வைகோ கட்சிக்குள் வருவதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

துரை வைகோவை எதிர்த்த மல்லை சத்யா

அதையும் மீறி தனது மகனை கட்சியின் முதன்மை செயலாளராக்கினார் வைகோ. அதுமட்டுமின்றி, மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதிகளில் நிற்க வைத்து எம்பியாக்கி அழகு பார்த்தார் வைகோ. இதனால், மதிமுக மூத்த நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

மல்லை சத்யாவின் பகிரங்க எதிர்ப்பு அவர் கட்சியை விட்டு நீங்கும் அளவுக்கு தள்ளப்பட்டது. கடும் எதிர்ப்பை சகித்துக் கொள்ள முடியாத வைகோ, அவரை மதிமுகவில் இருந்து நீக்கினார். அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.

திராவிட வெற்றிக் கழகம்

திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மல்லை சத்யா தனிக்கட்சி தொடங்க முடிவு செய்தார். அதன்படி, திராவிட வெற்றிக் கழகம்(Mallai Sathya New Party Dravida Vetri Kazhagam) என்ற பெயரில் புதிய கட்சியை அவர் தொடங்கி இருக்கிறார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் பெயரை அறிவித்த அவர், கொடியையும் அறிமுகம் செய்தார்.

அதிருப்தியாளர்கள் ஐக்கியம்

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட, விலகிய பலரும் திராவிட வெற்றிக் கழகத்தில் இணைந்து இருக்கிறார்கள். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மல்லை சத்யா செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் புதிய பெயரை திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருப்பூர் துரைசாமி அறிவித்தார். கருப்பு, சிவப்பு நிறத்தில் 7 நட்சத்திரங்கள் அடங்கிய கொடி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

வைகோ மீது விமர்சனம்

விருப்பு வெறுப்பு இல்லாமல், சமரசமின்றி அந்த தலைவனுக்கு ஒரு மெய்க் காப்பாளன் போல இருந்தவன். அரசியல்படுத்தப்படாத, ஜனநாயகப்படுத்தப்படாத வலதுசாரி கார்ப்பரேட் சிந்தனையை கொண்ட துரை வைகோவிற்காக என் மீது துரோகப் பழியை சுமத்தி என்னை இயக்கத்தில் இருந்து தூக்கி எறிந்தார்.

இதனால் பெரிதும் கலங்கினேன். அடுத்தகட்ட அரசியல் பயணத்திற்காக ஆயத்தமானேன். இன்று புதிய திராவிட இயக்கம் ஒன்று உதயமாகி இருக்கிறது என்று மல்லை சத்யா தெரிவித்தார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in