
மதிமுகவிலும் பனிப்போர் :
MDMK Mallai Sathya on Durai Vaiko Issue : பாமகவில் ஒரு பிரச்னை போன்று மதிமுகவிலுகம் உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, வாரிசை அரசியலை எதிர்த்து வருகிறார். ஆனால், தனது மகனை கட்சிக்குள் கொண்டு வந்த வைகோ, அவரை எம்பியாக்கி அழகு பார்த்தார். இதனால், துரை வைகோவிற்கும் மல்லை சத்யாவிற்கும் இடையே மோதல் வெடிக்க அதை சமாதான முயற்சி மூலம் அடக்கி வைத்தார் வைகோ.
வைகோ குற்றச்சாட்டு :
ஆனால், இப்போது மீண்டும் பிரச்னை வெடித்து இருக்கிறது. மல்லை சத்யா ஒரு துரோகி, பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் இழைத்ததை போன்று இவர் தனக்கு எதிராக செயல்படுவதாக வைகோ(Vaiko) குற்றம்சாட்டினார். பூந்தமல்லி மதிமுக(MDMK) கூட்டத்திலும் மல்லை சத்யாவை விமர்சித்து பேசினார். வைகோ. அந்தக் கூட்டத்திற்கு மல்லை சத்யா செல்லாத நிலையில், தற்போது விரிவான அறிக்கை ஒன்றை தந்திருக்கிறார்.
நான் துரோகியா? மல்லை சத்யா கேள்வி? :
அதில், ” மாத்தையா போன்று நான் துரோகியா?... 32 ஆண்டுகளா வசந்தத்தை தொலைத்து இரவு பகல் பாராமல் கட்சி தலைவர் திரு. வைகோ(MDMK Chief Vaiko) என்று பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப்பட்டதால், ஐந்து இரவுகளும் என்னால் தூங்க முடியவில்லை, என் தூக்கத்தை தொலைத்து விட்டேன்.
மேலும் படிக்க : ’துரை’க்காக எனக்கு ’துரோகி’ பட்டமா? : வைகோவை சாடும் மல்லை சத்யா
விஷம் வாங்கி கொடுத்திருக்கலாம் :
என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு உயர்ந்த உலகம் போற்றும் மாமனிதர் தலைவர் திரு. வைகோ எம்பி அவர்கள் வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலாமே அல்லது ஒரு பாட்டில் விசம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்து செத்து போய் இருப்பேனே.
அபாண்டமாக பழி சுமத்த வேண்டாம் :
அன்புத் தலைவர் திரு. வைகோ(Vaiko) அவர்களே அறம் சார்ந்த என் அரசியல் பொதுவாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா. உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன் இனி எக்காலத்திலும் யார் மீதும், எந்த தொண்டன் மீதும் இதைப் போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல .” என்று மல்லை சத்யா(Mallai Sathya) தெரிவித்துள்ளார்.
====