

திமுக எதிர்த்து மதிமுக :
MDMK Mallai Sathya on Durai Vaiko : திமுகவின் குடும்ப அரசியலை எதிர்த்து மதிமுக என்ற தனிக்கட்சியை
குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் வைகோ. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி நடத்தி வரும் அவர் தமிழகத்தின் பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
மாறி மாறி கூட்டணி, கடுமையாக எதிர்த்த திமுகவுடன் கைகோர்த்த செயல், மதிமுகவின் செல்வாக்கை சீர்குலைத்தது. கடந்த மக்களவை தேர்தலில் அவர்களின் சின்னமான பம்பரம் கூட கிடைக்காமல், தீப்பெட்டியில் துரை வைகோ(Durai Vaiko) போட்டியிட வேண்டியதாயிற்று .
வைகோவின் வலதுகரம் மல்லை சத்யா :
வைகோவிற்கு நம்பிக்கைக்கு உரியவராக கருதப்படும் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, இக்கட்டான கால கட்டங்களில் துணை நின்றவர். துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவித்த மல்லை சத்யா(Mallai Sathya MDMK), வாரிசு அரசியல் கூடாது என்ற நிலைப்பாட்டை கொண்டவர். இதனால் துரை வைகோ மல்லை சத்யா இடையில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக துரை வைகோ கட்சிப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
துரை வைகோ - மல்லை சத்யா மோதல் :
தொடர்ந்து வைகோ(Vaiko) உள்ளிட்ட மதிமுக மூத்த நிர்வாகிகள் தலையிட்டு இருவருக்கும் இடையில் சமாதானம் செய்தனர். ஆனால் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மல்லை சத்யா மீது வைகோ பாய்ச்சல் :
இந்தமுறை வைகோவே மல்லை சத்யா(Mallai Sathya) மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருப்பது, மதிமுகவில் புயலை கிளப்பி இருக்கிறது.
பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல், எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார். இதனால் மதிமுகவில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. கடந்த காலத்தில் செஞ்சி கணேசன் உள்ளிட்டோர் வெளியேறிய போதும் நெருக்கடி ஏற்படவில்லை. மதிமுகவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகளுடன் அவர் தொடர்பில் இருப்பது வருத்தமளிக்கிறது.
மல்லை சத்யா போன்று பட்டியலின பிரதிநிதித்துவம் மதிமுகவில் பலருக்கு வழங்கியுள்ளேன். மல்லை சத்யா பல காலம் எனக்கு துணையாக இருந்தார். குற்றச்சாட்டு அதனை நான் எத்தனையோ முறை பல இடங்களில் பெருமையாக பேசி இருக்கிறேன். ஆனால் சமீப காலமாக அப்படி இல்லை. மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை என்று தெரிவித்தார்.
வைகோவிற்கு மல்லை சத்யா பதிலடி :
இதைத்தொடர்ந்து, வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு மல்லை சத்யா(Mallai Sathya Issue) பதில் அளித்து இருக்கிறார். மதிமுகவில் துரோகி பட்டம் கொடுத்து என்னை வெளியேற்ற பார்க்கிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் அளிக்கிறார். வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை, துரோகி என்று சொல்லும் அளவிற்கு துணிந்துவிட்டார்.
உடைகிறதா மதிமுக :
வைகோவின் இந்த வார்த்தையை என்னால் தாங்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். இதனால் மதிமுக(MDMK) இரண்டாக பிரிகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது ஆதரவாளர்களுடன் மல்லை சத்யா தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மல்லை சத்யா பின்னால் திமுக? :
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், மதிமுகவில் உருவாகியுள்ள சிக்கல் அக்கட்சிக்கு பெரிய பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. மல்லை சத்யா விவகாரத்தின் பின்னணியில் திமுக இருப்பதாக கூறப்படுவது, வைகோ தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
=====