
ஜெக்தீப் தன்கருக்கு நன்றி :
Rajya Sabha MP Vaiko Retirement : மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இன்றுடன் ஓய்வு பெற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவையில் நிறைவுரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், என் மீது அன்பு காட்டிய அவையின் முன்னாள் தலைவர் ஜெக்தீப் தன்கருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன்.
எம்பி. யாக்கியவர் கருணாநிதி :
“என்னை முதன்முதலாக மாநிலங்களவை அனுப்பிய கலைஞருக்கு நன்றி. 1978 முதல் தொடர்ந்து மூன்று முறை எம்பியாக இருந்து இருக்கிறேன். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த முரசொலி மாறனால் வழிநடத்தப்பட்டவன் நான். மீண்டும் 2019 என்னை எம்பியாக்கி அனுப்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்(MK Stalin).
19 மாதங்கள் தடுப்பு காவல் :
இந்திய வரலாற்றில் 19 மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட ஒரே ஒரு எம்பி நான் மட்டுமே. மிசா சட்டத்தில் 12 மாதங்கள் சிறையில் இருந்தேன். சிறையில் நான் எழுதிய புத்தகத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.
சக எம்பிக்களுக்கு பாராட்டு :
மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே, ப. சிதம்பரம், சோனியா காந்தி, நிர்மலா சீதாராமன், திருச்சி சிவா, ஜான் பிரிட்டாஸ், தம்பிதுரை, சரத் பவார், அஸ்வினி வைஷ்வண் உள்ளிட்டோரின் உரைகளை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இனி இதையெல்லாம் கேட்க முடியாது என்பது எனக்கு வருத்தமாக உள்ளது.
மேலும் படிக்க : துணை ஜனாதிபதி தேர்தல் பணிகள் தொடக்கம் : ஆகஸ்டு 15க்குள் தேர்தல்?
ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பேன் :
ஈழத்தமிழருக்காக 13 முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். என்எல்சி தனியார் மயமாக்காமல் தடுத்திருக்கிறேன். தமிழ் ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன்.
இளம் எம்பிக்களுக்கு அறிவுரை :
இளம் எம்பிக்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன்(Vaiko Advise To Young MPs). லாங்ஃபெலோ கவிதையில் குறிப்பிட்டு இருப்பதை போல, ”உயரத்திற்கு சென்றவர்கள் எல்லாம் பறந்து செல்லவில்லை. கூட்டாளிகள் உறங்கும் போது சென்றவர்கள்” என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவைக்கு வரும் ஒவ்வொரு நாளும் சரியான திட்டமிடலும், முன்கூட்டியே தேவையானவற்றை தெரிந்து கொண்டு வர வேண்டும். திட்டமிடல் இருந்தால்தான் அவையில் சிறப்பாக செயல்பட முடியும்” இவ்வாறு வைகோ உரையாற்றினார்.
4 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 2 முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள வைகோ, 30 ஆண்டுகள் நாடாளுமன்ற பணியை இன்றுடன் நிறைவு(Vaiko Retirement From Rajya Sabha MP) செய்திருக்கிறார்.
=====