’நாமக்கல் கிட்னி திருட்டு’ : சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

Namakkal Kidney Theft Case : நாமக்கல் கிட்னி விற்பனை தொடர்பான வழக்கில் தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
Namakkal Kidney Theft Case Madurai High Court Bench Formed SIT Team To Investigate on Namakkal Organ Theft
Namakkal Kidney Theft Case Madurai High Court Bench Formed SIT Team To Investigate on Namakkal Organ Theft
2 min read

சட்ட விரோதமாக கிட்னி திருட்டு :

Namakkal Kidney Theft Case : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் சட்ட விரோதமாக கிட்னி விற்பனை அதிகரித்து வருகிறது. ஒருவர் இறந்த பிறகு உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுவதன் மூலம், பிறருக்கு வாழ்வு கிடைக்கிறது.

ஏழைகளை ஏமாற்றி கிட்னி திருடும் கும்பல் :

அதேசமயம் உயிருடன் வாழும் ஏழை எளிய மக்களை ஒரு கும்பல் அணுகி, உறுப்புகளை திருடும் சம்பவமும் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி அதிகரித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக வந்த புகார்களின் பேரில் புரோக்கர் ஆனந்தன் என்பவர் மீது போலீசார் புகார் பதிவு செய்தனர்.

இரண்டு தனியார் மருத்துவமனைகள் மூலம் கிட்னி திருட்டு நடைபெற்றது அம்பலமாகி உள்ளது. குறிப்பாக திமுகவை சேர்ந்த மணச்சலநல்லூர் எம்எல்ஏ கதிரவனுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. எனவே, கிட்னி திருட்டு வழக்கை சிபிஐ விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு :

கிட்னி விற்பனை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள் முருகன் ஆகியோர் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்கவும், அந்த குழுவில் யார் யார் இருக்கிறார்கள் என்ற விவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பித்தனர். பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் ஆணையிட்டனர்.

தமிழக அரசு வாதம், நீதிமன்றம் அதிருப்தி :

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தlமிழக அரசு தரப்பில் ’சுகாதார சேவைகளின் இயக்குனர் மட்டுமே விசாரித்து புகார் அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது. அதற்கு நீதிபதிகள் "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிகளோடு, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யலாமே என்று வினவினர்.

மேலும் படிக்க : கிட்னி திருட்டை பேசிய திமுக எம்எல்ஏ கதிரவன் : அண்ணாமலை விளாசல்

நீதிபதிகள் கண்டனம் :

மனித உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக புகார் எழுந்துள்ள நிலையில் உண்மையை அறிய முறையான விசாரணை அவசியமாகிறது" என்று நீதிபதிகள் கூறினர். அதாவது, மனித உடல் உறுப்புகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக புகார் வந்துள்ளதால், உண்மை என்னவென்று தெரிந்துகொள்ள சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும். சுகாதார சேவைகளின் இயக்குனர் புகார் கொடுத்தால் தான் வழக்கு பதிவு செய்ய முடியும் என்று அரசு கூறுவது சரியல்ல. இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

தமிழக அரசுக்கு அக்கறையில்லை :

பொதுமக்களின் வாழ்க்கை தொடர்பான விவகாரத்தில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றே தெரிகிறது. இந்த வழக்கில் தமிழக அரசின் நடவடிக்கை நீதிமன்றத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

SIT அமைக்க முன்வந்த தமிழக அரசு :

நீதிபதிகளின் கண்டனத்தை தொடர்ந்து சிறப்பு விசாரணை குழு அமைப்பதில் தயக்கம் ஏதும் இல்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. CBCID-யின் துணைத் தலைவரே அதற்கான உறுப்பினர்கள் குறித்து முடிவு செய்வார் என்று அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, தமிழக அரசு வழக்கறிஞர் விசாரணை குழு உறுப்பினர்களின் பட்டியலை நீதிபதியிடம் வழங்கினார்.

தென்மண்டல ஐஜி தலைமையில் SIT :

தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சின்ஹா IPS தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் குழுவில், நிஷா IPS, சிலம்பரசன் IPS, கார்த்திகேயன் SP, அரவிந்த் SP மதுரை ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள்.

செப். 24ம் தேதி மீண்டும் விசாரணை :

நாமக்கலில் நடைபெற்ற கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் இந்தக் குழு தாக்கல் செய்யும். வழக்கு செப்டம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் சிறப்பு விசாரணைக் குழு தனது முதல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in