
ஆணவக் கொலைகள் :
CPIM Office Open for Inter Caste Marriage in Tamil Nadu : தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து உள்ளன. இதனை கடுமையாக கண்டித்து வரும் அரசியல் கட்சிகள், ஆணவக் கொலைகள் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ சண்முகம்(CPIM P Shanmugam) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் அலுவகங்களில் காதல் திருமணங்கள் :
தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள்(Inter Caste Marriage) செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள்(Love Marriages in CPIM Office) நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன.
நெல்லையில் 240 கொலைகள் :
நெல்லை மாவட்டத்தில் மட்டும் ஒரே ஆண்டில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறி செல்கிறது. கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் தற்போது நிலவுகிறது.
ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் :
அதே சமயம் பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்தச் சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை(Law for Honour Killing) கொண்டு வர வேண்டும்.
வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை முதல்வர் ஸ்டாலின்(MK Stalin) கொண்டு வர வேண்டும்” இவ்வாறு பெ. சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க : ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் : உறுதியளித்த மா.கம்யூ
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்தி கொள்ளலாம் என்று அவர் கூறி இருப்பது, தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
======