GST 2.0: விலை குறைப்பா? தள்ளுபடியா? : மக்களை ஏமாற்றும் திமுக அரசு

New GST 2.0 Rates on Aavin Milk Products : பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், பண்டிகைக்கால தள்ளுபடி என்ற பெயரில் மக்களை குழப்பி இருக்கிறது திமுக அரசு.
New GST 2.0 Rates on Aavin Milk Products
New GST 2.0 Rates on Aavin Milk Products
2 min read

பால் பொருட்கள் ஜிஎஸ்டி - 5 சதவீதம் :

New GST 2.0 Rates on Aavin Milk Products : பால் பொருட்கள் மீதான வரியை 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்து அது நடைமுறைக்கு வந்து விட்டது. இந்தியா முழுவதும் உள்ள கூட்டுறவு பால் நிறுவனங்கள் இந்த வரிக்குறைப்பை நடைமுறைப்படுத்தி அதன்பலனை மக்களுக்கு வழங்கி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் திமுக அரசும், ஆவின் நிறுவனமும் பால் பொருட்கள் மீதான விலை குறைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தி பண்டிகை கால தள்ளுபடி(Aavin Festival Season Discount) என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகின்றன.

பலனை மக்களுக்கு வழங்காத திமுக அரசு :

நான்கு அடுக்குகளாக இருந்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2 அடுக்குகளாக குறைப்பட்டு(GST Reforms), நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. ஆனால், ஜிஎஸ்டி குறைப்பின் பலனை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்கவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் என்றால் ஆவின் விலை தான்(New GST Rate on Aavin Milk Products).

நவம்பர் 30 வரை தள்ளுபடி மட்டுமே :

பால் பொருட்கள் மீதான 12% வரி, 5% ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் மூன்றாவது பெரிய பொதுத்துறை பால் பண்ணை கூட்டமைப்பான ஆவின் நிறுவனம்(Aavin Dairy Products) உடனடியாக விலைகளை குறைக்கவில்லை. பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் கடும் விமர்சனங்கள், எதிர்ப்பை தொடர்ந்து வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஆவின் நிறுவனம், நெய்யின் விலையில் லிட்டருக்கு ₹40 குறைப்பு, பனீர் மீதான தற்போதைய தள்ளுபடி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தது. அப்படி என்றால், நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு விலைகளில் என்ன மாற்றம் இருக்கும் என்பதை ஆவின் நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை. மேலும் அதன் தயாரிப்புகளின் அதிகபட்ச விற்பனை விலை, ஜிஎஸ்டிக்கு முந்தைய நிலையைதான் வெளிப்படுத்துகிறது.

நாடு முழுவதும் விலைக்குறைப்பு :

பாஜக ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் கூட்டுறவு பால் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக குஜராத்தின் அமுல் நிறுவனம் பால், வெண்ணெய், நெய், சீஸ், பனீர், ஐஸ்கிரீம், சாக்லேட்டுகள் மற்றும் சிற்றுண்டிகள் உட்பட 700க்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகளைக் குறைத்து இருக்கிறது.

விலையை குறைத்த கூட்டுறவு நிறுவனங்கள் :

கர்நாடகாவின் நந்தினி பால்(Nandhini Milk) நிறுவனம் 21 பொருட்களுக்கான விலைகளைத் திருத்தியுள்ளது, இது செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. மதர் டெய்ரி என்று அழைக்கப்படும் டெல்லியில் கூட்டுறவு பால் நிறுவனமும், பாலை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் குறைத்துள்ளது. அதேபோன்று பால் பொருட்களின் மீதான விலையையும் குறைத்திருக்கிறது.

மக்கள் மீது அக்கறை இல்லாத திமுக :

2022ம் ஆண்டு ஜூலை மாதம் ஆவின் தயிர், நெய் மற்றும் பிற பால் பொருட்களின் விலைகள் 10 முதல்15% வரை உயர்த்தப்பட்டன. 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதைக் காரணம் காட்டி. வரி அமலுக்கு வந்த மூன்று நாட்களுக்குள் பொதுமக்களை பற்றி கவலைப்படாமல், விலை உயர்வு(Aavin Milk Price) அமல்படுத்தப்பட்டது.

மத்திய அரசை குறை சொல்வதே வாடிக்கை :

தமிழ்நாட்டில், விலைகள் உயரும்போது பெரும்பாலும் மத்திய அரசை குறை சொல்வதை திமுக வழக்கமாக செய்து வருகிறது. அதேசமயம்,

செலவுகளைக் குறைக்க மத்திய அரசு வரிகளைக் குறைக்கும்போது, ​​அதன் நன்மைகளை வரவேற்கா விட்டாலும் பரவாயில்லை, அவற்றின் பலன்களை மக்களுக்கு கிடைப்பதையும் திமுக அரசு தடுத்து வருகிறது. இதுதான் திமுகவின் இரட்டை நிலைப்பாடு.

மக்களுக்கு பலனை வழங்கிய பிற மாநிலங்கள் :

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பை புறக்கணித்தன் மூலம், திமுக அரசு மக்களின் மிகவும் அத்தியாவசியமான பால் பொருட்களை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. ஆனால், பிற மாநிலங்கள் உள்ள கூட்டுறவு பால் பண்ணைகள், ஜிஎஸ்டி திருத்தத்திற்கு ஏற்ப விலைகளை குறைத்து அவற்றின் பலனை மக்களுக்கு வழங்கி இருக்கின்றன.

மேலும் படிக்க : GST : ஜிஎஸ்டி குறைப்பின் முழு விவரம் இதோ - தமிழ்நாட்டின் நன்மைகள்!

குளறுபடி செய்யும் ஆவின் நிர்வாகம் :

மத்திய அரசின் மீதான திமுகவின் விரோதம், மற்ற இந்தியர்கள் அனுபவிக்கும் சலுகைகளை திட்டமிட்டே மறுப்பது, தமிழக மக்களை நேரடியாகப் பாதிக்கிறது. மக்களுக்காக அரசு செயல்படுவதாக இருந்தால், ஜிஎஸ்டி வரி குறைப்பைத் தொடர்ந்து விலைகள் குறைக்கப்பட்டதை பிரதிபலிக்கும் திருத்தப்பட்ட விலைப் பட்டியலை ஆவின் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. .

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in