நகராட்சி தலைவர் பதவிப் பறிப்பு : எதிராக ஓட்டு போட்ட திமுகவினர்

Krishnagiri Municipality Chairman Farida Nawab : கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், திமுக உறுப்பினர்களின் அமோக ஆதரவால் வெற்றி பெற்றது.
No confidence motion against Krishnagiri Municipality Chairman Farida Nawab was successful, overwhelming support of DMK councillors
No confidence motion against Krishnagiri Municipality Chairman Farida Nawab was successful, overwhelming support of DMK councillorsGoogle
1 min read

கிருஷ்ணகிரி நகராட்சி

Krishnagiri Municipality Chairman Farida Nawab : கிருஷ்ணகிரி நகராட்சியின் தலைவராக இருப்பவர் பரிதா நவாப். துணைத் தலைவராக திமுகவை சேர்ந்த சாவித்தரி கடலரசுமூர்த்தி பொறுப்பு வகித்து வருகிறார். கிருஷ்ணகிரி நகராட்சியில் திமுக கவுன்சிலர்கள் 25 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும், காங்கிரஸ், பாஜக கவுன்சிலர்கள் தலா ஒருவர் என மொத்தம் 33 பேர் உள்ளனர்.

நகராட்சி தலைவருக்கு எதிராக புகார்

இந்நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி, திமுக கவுன்சிலர்கள் 23 பேர் நகராட்சி தலைவர்(Farida Nawab Krishnagiri) மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும், தலைவரின் செயல்பாடுகள் நகராட்சிக்கும், அரசுக்கும் எதிராக உள்ளது என நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமாரிடம் புகார் மனு அளித்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்

இதையடுத்து, கவுன்சிலர்கள், நகராட்சி தலைவருக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு, இன்று காலை நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

நகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக கவுன்சிலர்கள் 21 பேர், அதிமுக கவுன்சிலர் ஒருவர், சுயேச்சை கவுன்சிலர்கள் 4 பேர், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 27 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்களித்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி

அதன்பின்னர், ஆணையாளர் சதீஷ்குமார் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவித்தார். “தலைவர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 27 கவுன்சிலர்கள் வாக்களித்துள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

புதிய தலைவர் விரைவில் தேர்வு

எனவே இந்த தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். புதிய தலைவர் தேர்வு நடைபெறும் நாள் குறித்து அரசு முறையாக அறிவிப்பை வெளியிடும்.” என ஆணையாளர் தெரிவித்தார்.

திமுகவினரே எதிராக வாக்களிப்பு

நகராட்சி தலைவருக்கு எதிராக சொந்த கட்சியை சேர்ந்தவர்களே அதாவது, திமுக கவுன்சிலர்கள் 21 பேர் வாக்களித்து இருப்பது, உட்கட்சி பூசலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் இத்தகைய பதவியிழப்புகள், கோஷ்டி மோதல் சம்பவங்கள் திமுக தலைமைக்கு தலைவலியை கொடுத்துள்ளன.

மக்கள் நலனை முக்கியம் - அதிமுக

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்களித்த அதிமுக கவுன்சிலர் நாகஜோதி கூறும்போது, “33 வார்டுகளின் வளர்ச்சிக்காக தான் நகராட்சித் தலைவரின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு(No Confidence Motion On Krishnagiri Chairman) வாக்களித்தேன். வார்டு மக்களின் நலனே முக்கியம்” என்றார்.

சங்கரன்கோவில், திட்டக்குடி வரிசையில், தற்போது கிருஷ்ணகிரி நகராட்சி தலைவரும் பதவியை இழந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in