”திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள்” : ஓணம் கொண்டாட இங்கு வாங்க...

Onam Festival 2025 Celebration in Tamil Nadu : தமிழகத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாட விரும்புவோர், திருக்கோவிலூர்(Thirukovilur) உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சென்று இறைவனை சேவிக்கலாம்.
Onam Festival 2025 Celebration in Thirukovilur Of Tamil Nadu
Onam Festival 2025 Celebration in Thirukovilur Of Tamil Nadu
2 min read

வாமன அவதாரம் :

Onam Festival 2025 Celebration in Tamil Nadu : திருமாலின் 10 அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம். மகாபலி மன்னனை ஆட்கொள்ள வந்த வாமனராக வந்த திருமால், விஸ்வரூபம் எடுத்து அவரை ஆட்கொண்டார். ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று திருமாலிடம் மகாபலி சக்ரவர்த்தி கோரிக்கை விடுத்தார்.

ஓணம் பண்டிகை :

அதை வரமாக திருமால் அருள, அதன்படி, ஆண்டு தோறும் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளே ஓணம்(Onam History in Tamil) எனும் திருவோணத் திருநாளாக கேரள மக்கள் கொண்டாடுகின்றனர். ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை. சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாள், வாமனர் அவதரித்த நாள் என்று இது குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை 5ம் தேதி அதாவது வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் :

இந்த பண்டிகையை தமிழகத்தில் கொண்டாட சிறப்பு மிக்க கோவில் ஒன்று உள்ளது. அதுதான், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்(Shri Ulagalantha Perumal Temple). வாமனரின் விஸ்வரூபக் காட்சியை காண மிருகண்டு என்ற முனிவருக்கு ஆவல் ஏற்பட்டது. அவர் பிரம்மாவிடம் இதைக்கூற, ‘பூவுலகில் கிருஷ்ணபத்ரா நதிக்கரையில் உள்ள கிருஷ்ண க்ஷேத்திரத்தில் தவம் செய்தால் அந்த தரிசனம் கிடைக்கும்’ என்றார் பிரம்மா.

தம்பதியின் பக்தியை சோதித்த பெருமாள் :

அதன்படி, முனிவர் தனது மனைவி மித்ராவதியுடன் இங்கு வந்து தவம் இருந்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கி இறைவனை வேண்டியபடி இருவரும் இருக்க, அவர்களை சோதிக்க விரும்பினார் திருமால். வயோதிக அந்தணர் வடிவில் வந்து அன்னம் கேட்க, வீட்டில் உணவு ஏதும் இல்லாத நிலையில், மிருகண்டு முனிவரின் மனைவி,

நாராயணனை நினைத்து ஒரு பாத்திரத்தை கையில் எடுத்து, அது அன்னத்தால் நிரம்ப வேண்டும் என்று வேண்டினார். அதன்படி அன்னம் திரும்ப, அந்தணர் வடிவில் இருந்த திருமால், அவர்களுக்கு விசுவரூப தரிசனம் காட்டி அருளினார்.

வலது கையில் சங்கு, இடது கையில் சக்கரம் :

பொதுவாக, மகாவிஷ்ணு தனது வலது கையில் சக்கரமும் இடது கையில் சங்கும் வைத்திருப்பார். ஆனால், இந்தத் தலத்தில் மிருகண்டு முனிவரின் உபசரிப்பில் மகிழ்ந்து, தன்னை மறந்த நிலையில் வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் ஏந்திய கோலத்தில் காட்சியளிக்கிறார் பெருமாள். இங்கு இறைவனின் திருநாமம் திரிவிக்கிரமர். இவருக்கு உலகளந்த பெருமாள்(Ulagalantha Perumal), ஆயனார் இடைக்கழி ஆயன் என்ற திருநாமங்களும் உண்டு.

வாமனராக அருள்பாலிக்கும் திருமால் :

கருவறையில் பெருமாள் வலது காலால் ஆகாயத்தை அளந்தபடியும், இடது காலை பூமியில் ஊன்றியும் அருள்பாலிக்கிறார். தூக்கிய வலது திருவடிக்கு பிரம்மா ஆராதனை செய்கிறார். கீழே ஊன்றிய இடது திருவடிக்கு கீழ் மகாபலியின் மகன் நமச்சு மகாராஜா பூஜை செய்கிறார். மூலவர் திருமேனி மரத்தாலானது. நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் உள்ள பெருமாள் சிலைகளில் இதுவே மிக உயரமானது.

மேலும் படிக்க : வேளாங்கண்ணியில் இன்று கொடியேற்றம் : குவிந்துள்ள பொதுமக்கள்

ஓணம் திருவிழா 2025 கொண்டாட்டம் :

மூலவரின் பின்னால் வாமனன் காட்சி தருகிறார். திருவோணத்தன்று(Thiruvonam 2025 Date) அவரை சந்தனக் காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். திருவோணம் பண்டிகையன்று காலை பத்து மணிக்கு சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், மாலை நாலு மணிக்கு வெண்ணை காப்பு, ஐந்து மணிக்கு தீப பிரதிஷ்டை, ஐந்தரை மணிக்கு ஆயிரத்தெட்டு தீபம், ஆறு மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும். கேரளாவுக்கு சென்று ஓணம் பண்டிகையை கொண்டாட முடியாதவர்கள், இந்தப் பண்டிகையை கொண்டாட விரும்பும் தமிழர்கள், திருக்கோவிலூர் வந்து இறைவனை சேவித்து அருளை பெறலாம்.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in