
வேளாங்கண்ணி பேராலயம் :
Velankanni Church Festival Flag Hoisting 2025 Date And Time : புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்து இருக்கிறது. கத்தோலிக்க திருத்தலமான இது, தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று அதிசயங்களால் இந்த பேராலயம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தது.
ஆரோக்கிய மாதா பிறந்தநாள் :
கன்னி மரியாவின் பிறந்த நாளும், போர்த்துகீசிய மாலுமி கரை அடைந்த நாளும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது(Velankanni Church Festival Date 2025). பிரான்சு நாட்டின் லூர்து நகரில் உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டது.
புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, பேராலய ஆண்டு பெருவிழா(Velankanni Festival 10 Days) ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இன்று மாலை கொடியேற்றம் :
அதன்படி இந்த ஆண்டுக்கான பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை 6 மணிக்கு(Velankanni Church Festival Flag Hoisting 2025 Time) கொடியேற்றதுடன் தொடங்குகிறது. தஞ்சை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார். தொடர்ந்து தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
செப்டம்பர் 7ம் தேதி தேர்பவனி :
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி செப்டம்பர் 7ம் தேதி இரவு நடைபெறுகிறது. அடுத்தநாள் புனித ஆரோகிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்றைய தினம் சிறப்பு கூட்டு திருப்பலியும், திருக்கொடி இறக்கும் நிகழ்வும் நடைபெறும்.
நடைப்பயணமாக பக்தர்கள் :
கொடியேற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் நடை பயணமாக வந்து வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணி மாதா உருவம் பொறித்த கொடிகளை ஏந்தியும், திருவுருவச்சிலையுடன் கூடிய தேரை இழுத்துக் கொண்டும் வருகின்றனர்.
மேலும் படிக்க : வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா 2025 : ”சிறப்பு ரயில்கள் இயக்கம்”
விழாக்கோலம் பூண்டுள்ள வேளாங்கண்ணி :
10 நாட்கள் திருவிழாவை ஒட்டி, வேளாங்கண்ணி விழாக்கோலம் பூண்டு இருக்கிறது. கடற்கரை சாலை, கடைவீதி, தேவாலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேளாங்கண்ணி நகரமே வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பான செய்யப்பட்டு இருக்கின்றன. கொடியேற்ற நிகழ்வை ஒட்டி சிறப்பு பேருந்துகள், ரயில்கள்(Velankanni Special Train) இயக்கப்பட்டு வருகின்றன.
==================