’அரசியலில் நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை’ : ஓபிஎஸ் ஆருடம்

OPS Speech After CM MK Stalin Meet : அரசியலில் நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை என்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய ஓபிஎஸ் விளக்கம் அளித்து இருக்கிறார்.
O Panneerselvam Meet Tamil Nadu CM MK Stalin
O Panneerselvam Meet Tamil Nadu CM MK Stalin.com/CMOTamilnadu
2 min read

அரசியலில் நம்பர் 2 :

OPS Speech After CM MK Stalin Meet : அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது தலைவராக வலம் வந்தவர் ஓ.பன்னீர்செல்வம். மூன்று முறை முதல்வர் பதவியை வகித்த அவர், தர்மயுத்தம் மூலம் சசிகலாவை எதிர்த்து நின்றார். அதிமுகவில் போதிய ஆதரவு கிடைக்கா நிலையில், பாஜகவின்ம முயற்சியால், எடப்பாடியுடன் கைகோர்த்து துணை முதல்வரானார்.

அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டார் :

சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை பறிகொடுக்க, எடப்பாடி எதிராக திரும்பிய ஓபிஎஸ், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். பாஜக ஆதரவுடன் செயல்பட்டு வந்த மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதனால், செல்வாக்கை இழந்து விட்ட அவர், அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமை குழு மூலம் அதிமுகவில் இணைய மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியை தழுவின.

பாஜக கூட்டணியில் இருந்து விலகல் :

அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது ஓபிஎஸ் அவரை சந்திக்க முயன்றார். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ், பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். அதற்கு முன்னதாக நேற்று காலை முதல்வர் ஸ்டாலினை நடைப்பயிற்சியின் போது ஓபிஎஸ் சந்தித்தது(OPS Meet MK Stalin) பரபரப்பை ஏற்படுத்தியது.

முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு :

இந்தநிலையில் நேற்று மாலை மீண்டும் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் ஓபிஎஸ் சந்தித்தார். அவரை வாசல் வரை வந்து அழைத்து சென்றார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது. பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்(OPS Press Meet), ''அரசியலில் நண்பர்களும் இல்லை; எதிரிகளும் இல்லை. மருத்துவமனை சிகிச்சைக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பியுள்ளார். உடல்நலம் குறித்து விசாரிக்க, வீடு தேடிச் சென்று சந்தித்தேன். கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தேன்.

ஸ்டாலினுடன் அரசியல் பேசவில்லை :

இந்த சந்திப்பின்போது முதல்வர் ஸ்டாலினுடன் அரசியல் பேசவில்லை. ஜெயலலிதாவின் நேரடி பார்வையில், 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். எனக்கு அனைத்தும் தெரியும். அரசியலில் எனக்கென்று தனி மரியாதை இருக்கிறது. அண்மையில் பாஜக தலைவர்கள் யாரையும் நான் சந்திக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள் :

மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை எனக் கூறி, தமிழகத்திற்கான கல்வி நிதியை தர மறுக்கும் மத்திய அரசின் செயல் சரியில்லை. அதனால், மத்திய அரசை விமர்சிக்கிறேன். சட்டசபை தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் பழனிசாமிக்கு வாழ்த்துக்கள்.

விஜய்யுடன் பேசவில்லை :

தமிழக வெற்றிக் கழகத்தின் உடனான கூட்டணிக்காக விஜய் என்னிடம் பேசவி ல்லை; நானும் அவரிடம் பேசவில்லை. எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறதா என்றால், அரசியலில் நண்பர்களும் இல்லை; எதிரிகளும் இல்லை என்பது தான் கடந்த கால வரலாறு. தேர்தல் நெருக்கத்தில் எதுவும் நடக்கலாம்” இவ்வாறு ஓபிஎஸ் பதிலளித்தார்.

=================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in