பழநி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு : விற்றவர், வாங்கியவர் உட்பட 4 பேரை அதிரடியாக கைது செய்த சிபிசிஐடி.! : விசாரணை தீவிரம்

பழநி முருகன் கோயில் நிலத்தை ₹2 கோடிக்கு போலிப் பதிவு செய்த வழக்கில் அறக்கட்டளை நிர்வாகி மற்றும் வாங்கியவர்கள் உட்பட 4 பேர் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Palani Rs 100-crore land scam: CB-CID makes surprise arrests of four individuals!
Palani Rs 100-crore land scam: CB-CID makes surprise arrests of four individuals!google
2 min read

Palani Rs 100-crore land scam: CB-CID makes surprise arrests of four individuals!

பழநியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.100 கோடி மதிப்பிலான திருக்கோயில் நில மோசடி வழக்கில், நிலத்தை விற்றவர் மற்றும் வாங்கியவர் உள்ளிட்ட 4 பேரை சிபிசிஐடி காவல்துறை இன்று அதிகாலை ( 29-07-2026) அதிரடியாக கைது செய்துள்ளது.

பழநி கோயில் பின்னணி மற்றும் பின்னடைவு

பழநி அடிவாரம் பூங்கா சாலையில் அமைந்துள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தை பழநி தேவஸ்தானத்துடன் இணைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இலவச வாகனம் நிறுத்துமிடம்

இதையடுத்து, பல வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த இந்த நிலம் மீட்கப்பட்டு, பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இலவச வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு

அந்நிலையில், சுமார் ரூ. 100 கோடி மதிப்பிலான இந்த ஆன்மிக நிலத்தை, வெறும் ரூ. 2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இடைநீக்கம் மற்றும் சிபிசிஐடி விசாரணை

கடந்த ஜூலை 6 அன்று பொறுப்பு வகித்த சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், சட்டவிரோதமாக இந்த நிலத்தைத் தனிநபர்களுக்குப் பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

சிபிசிஐடி - க்கு மாறிய வழக்கு

இது தொடர்பாக சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்டப் பதிவாளர் சசிகலா ஆகியோர் உடனடி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையும் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பணம்

மேலும், பதிவுத்துறையின் உயர்நிலைக் குழுவைச் சேர்ந்த கூடுதல் பதிவுத்துறை தலைவர் சுதா மல்யா, உதவி பதிவுத்துறை தலைவர் பூங்கொடி மற்றும் சென்னை மாவட்டப் பதிவாளர் கண்ணன் ஆகியோர் பழநி பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

மூலப்பத்திரம் ஒப்படைப்பும் அதிரடி கைதும்

நேற்று (28-07-2026) தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு அந்த நிலத்தை தானமாக வழங்கிய பழநி பாலசமுத்திரம் குப்புசாமி மணியக்காரரின் வாரிசுகள், அதன் உண்மையான மூலப்பத்திரத்தை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி காவல்துறை இன்று ( 29-07-2026) அதிகாலை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு 4 பேரைக் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் விவரம்

  1. முருகதாஸ் (விழுப்புரம்) - நிலத்தை விற்ற அறக்கட்டளை நிர்வாகி.

  2. வெள்ளைத்துரை (பாப்பான்குளம், உடுமலைப்பேட்டை) - நிலத்தை வாங்கியவர்.

  3. சேதுபதி (டி.கே.என்.புதூர், பழநி) - நிலத்தை வாங்கியவர்.

  4. அன்வர்தின் (பழநி) - பத்திரப் பதிவில் சாட்சி கையெழுத்திட்டவர்.

தீவிர விசாரணையில் 4 பேர்

கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த நில மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை சிபிசிஐடி தீவிரமாகத் தேடி வருகிறது.

இதையும் படிங்க: International Tiger Day : ”ஜூலை 29 உலக புலிகள் தினம்” : உலகளவில் இந்தியாவில் 70% புலிகள் : "Camera Trap"ல் சாதனை..!

====

logo
Thamizh Alai
www.thamizhalai.in