
ரேஷன் கடைகளில் பணப் பரிமாற்றம் :
UPI Payment System in TN Ration Shops : தமிழகம் முழுவதும் 37,328 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் அரசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று மக்கள் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்து சில்லரை வாங்க வேண்டி இருக்கிறது. இதனால், ஊழியர்களின் நேரம் விரயமாவதோடு, சில்லரை பற்றாக்குறையும் பிரச்சினையாக உள்ளது.
ரேஷன் கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை :
எனவே, அனைத்து ரேஷன் கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10,661 கடைகளில் மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனை(Online Payment) வசதி உள்ளது. இந்த புதிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ (UPI) வசதி கிடைக்கும். இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பணம் செலுத்த முடியும்.
வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் :
இந்த திட்டத்தின் மூலம் கையாடல் சம்பவங்களை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் அரசு இலக்கு வைத்துள்ளது. ரேஷன் கடைகளின் செயல்பாடுகளை நவீனமயமாக்குதல், ISO தரச்சான்றிதழ் பெற இது உதவியாக இருக்கும். இதற்காக POS கருவி, ஸ்கேனர் மற்றும் தானியங்கி பில்லிங் இயந்திரம்(TN Ration Billing Machine) ஆகிய தொகுப்பு வழங்கப்படும். இதற்காக ஒரு கடைக்கு சுமார் ரூ.20,000 வரை செலவாகும்.
மேலும் படிக்க : டிஜிட்டல் மயமாகும் அஞ்சலகங்கள் : ஆகஸ்டில் யுபிஐ வசதி அறிமுகம்tn ration shop apply tamil
வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை :
யுபிஐ திட்டம் ரேஷன் கடைகளின் நிர்வாகத்தை மேம்படுத்த உதவும். யுபிஐ பணப் பரிவர்த்தனை முறை(UPI Payment System) மூலம், கடைகளின் செயல்பாடுகளை நவீனமாகி, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும். நியாய விலைக் கடைகளில் உள்ள 3,353 காலியிடங்களை நிரப்பவும் அரசு முடிவு செய்துள்ளது.
=====