ஆட்சி அதிகாரத்தில் பங்கு : அன்புமணிக்கு செக் வைக்கும் ராமதாஸ்

Ramadoss on Anbumani Ramadoss : ஆட்சி அதிகாரத்தில் பாமகவுக்கு பங்கு என்று சொல்வது, அன்புமணியின் சொந்த கருத்து என்று, ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார்.
PMK Leader Ramadoss on Anbumani Ramadoss Statement on PMK Rule in Tamil Nadu
PMK Leader Ramadoss on Anbumani Ramadoss Statement on PMK Rule in Tamil Nadu
1 min read

யார் பக்கம் போகும் பாமக :

Ramadoss on Anbumani Ramadoss : பாமகவில் ராமதாஸ் - அன்புமணி மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், 2026ல் அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது. அதிமுக கூட்டணிக்கு வர அன்புமணி விரும்புவதாகவும், திமுக கூட்டணிதான் ராமதாசின் சாய்ஸ் என்றும் கூறப்படுகிறது.

ஆட்சி அதிகாரத்தில் பாமக :

இந்த பாமக 37வது ஆண்டு விழாவை(PMK 37th Anniversary) ஒட்டி, தொண்டர்களுக்கு மடல் எழுதிய அன்புமணி, அடுத்த ஆண்டு அமையும் ஆட்சியில் பாமகவும் பங்குபெற வேண்டும் என்றார். ஆட்சி, அதிகாரத்திற்கு வர பாமகவிற்கு முழு உரிமை, தகுதி இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். திமுக கூட்டணியை பொருத்தவரை, தேர்தலில் மட்டுமே கூட்டு, ஆட்சியில் ஒற்றை கட்சி என்பதுதான் கொள்கை. எனவே, அதிமுக கூட்டணிக்காக அன்புமணி(Anbumani Ramadoss) இப்படி கூறுகிறாரா என்ற ஐயம் எழுந்தது.

மேலும் படிக்க : ஆட்சி, அதிகாரத்தில் பாமகவுக்கு பங்கு : குரல் கொடுக்கும் அன்புமணி ராமதாஸ்

கொடியேற்றி கொண்டாடிய ராமதாஸ் :

இந்தநிலையில், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில், பாமகவின் 37ம் ஆண்டு துவக்க விழாவில்(PMK 37th Anniversary 2025) பங்கேற்ற ராமதாஸ், கொடிக்கம்பத்தில், கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பேராசிரியர் தீரன், பொறியாளர் முகுந்தன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், செயற்குழு உறுப்பினர் சுப்பராயலு, மாவட்ட தலைவர் பாவாடைராயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து நிகழ்ச்சியில் கொண்டனர்.

ஆட்சியில் பங்கு, அன்புமணிக்கு பதிலடி :

ராமதாசை(Ramadoss) சந்தித்த செய்தியாளர்கள் தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அன்புமணி கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், ஆட்சியில் பங்கு என்பது அவரது சொந்த கருத்து, பாமகவின் முடிவு அல்ல என்று திட்டவட்டமாக தெரிவித்தார். எனவே, திமுக கூட்டணி(DMK PMK Alliance) என்பதில் ராமதாஸ் உறுதியுடன் இருப்பது இதன்மூலம் தெளிவாகிறது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in