தூய்மை பணியாளர்: சொன்னது 23,000 கொடுப்பது 16,950 : அன்புமணி ஆவேசம்

Anbumani Ramadoss on DMK Government : தூய்மை பணியாளர்களுக்கு 23 ஆயிரம் ஊதியம் தருவதாக சொல்லி, திமுக அரசு ஏமாற்றி விட்டதாக, அன்பமணி கடுமையாக குற்றம்சாட்டி இருக்கிறார்.
Anbumani Ramadoss on DMK Government
Anbumani Ramadoss on DMK Government
2 min read

ரூ.23,000 தருவதாக வாக்குறுதி :

Anbumani Ramadoss on DMK Government : இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட இராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி செய்வதற்காக மாதம் ரூ.23,000 ஊதியம் தருவதாக வாக்குறுதி அளித்தனர். தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி அதிகாரிகளும், திமுக மாநாகராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைத்துச் சென்று தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வைத்தனர்.

உண்மையில் ரூ.16,950 தான் ஊதியம் :

ஆனால், பணி ஒப்பந்தத்தில் ரூ.16,950 மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. தூய்மைப் பணியாளர்களின் வறுமையையும், அறியாமையையும் பயன்படுத்தி அவர்களை திமுக அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

தனியார் நிறுவனத்திற்கு ரூ.2,300 கோடி :

சென்னை என்விரோ சொலூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு ரூ. 2300 கோடிக்கு தமிழக அரசு வழங்கியது. அதனால் அந்த இரு மண்டலங்களில் பணியாற்றி வந்த நிரந்தரப் பணியாளர்கள் அம்பத்தூர் மண்டலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனியார் நிறுவனம் வழங்கும் ஊதியத்தை வாங்கிக் கொண்டு பணியில் சேரும்படி கட்டாயப்படுத்தப்பட்டு, தற்போது, மாதம் ரூ.16,950 மட்டுமே ஊதியமாக கிடைக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

நீதிமன்ற உத்தரவை மீறுவதா? :

அதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்(Sanitary Workers Protest) நடத்திய நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அவர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.23,000 ஊதியம் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. அதன்பின் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி தூய்மைப் பணியாளர்களை அழைத்த சென்னை மாநகராட்சியின் துப்புரவு ஆய்வாளர்களும், மாநகராட்சி உறுப்பினர்களும், ‘’ இன்றைக்கே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மாதம் ரூ.23,000 ஊதியம் வழங்கப்படும்; வேலைநிறுத்தம் செய்த நாள்களுக்கும் ஊதியம் வழங்கப்படும்; இந்த சலுகை இன்று ஒரு நாள் மட்டும் தான்” என்று கூறியதை நம்பி தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

பணியாளர்களை ஏமாற்றி மோசடி செய்வதா? :

ஒப்பந்தத்தை படித்து பார்த்த போது, அதில் மாத ஊதியம் ரூ.16,950 மட்டும் தான் என்றும், நிறுவனம் நினைத்தால் ஒரு மாத ஊதியத்தை வழங்கி எப்போது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்யலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. தூய்மைப் பணியாளர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாததைப் பயன்படுத்தி இந்த மோசடியை தனியார் நிறுவனம் செய்திருக்கிறது.

மேலும் படிக்க : Anbumani: ’தூய்மைப் பணியாளர்களை சுரண்ட வேண்டாம்’: அன்புமணி விளாசல்

துரோகத்திற்கு திமுக அரசு துணை போகிறது :

அதற்கு திராவிட மாடல் அரசு துணை போயிருக்கிறது. தூய்மைப் பணியாளர்களின் மாத ஊதியத்தில்(Sanitary Workers Salary) மூன்றில் ஒரு பங்கை மோசடி செய்வது பெரும் குற்றம். இதை மன்னிக்க முடியாது. வரும் தேர்தலில் இந்த துரோகத்திற்கான தண்டனையிலிருந்து திமுக தப்ப முடியாது” இவ்வாறு அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in