
பாமக பொதுக்குழு கூட்டம் :
Anbumani Speech About PMK Alliance : மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அன்புமணி தலைமையில் நடைபெற்றது. இதில் அன்புமணி தலைவராக ஓராண்டு நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வடிவேல் ராவணன், திலகபாமா ஆகியோரும் தற்போது வகித்து வரும் பதவிகளில் நீடிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
ராமதாஸ் வழியில் பயணிப்போம் :
இதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் ஏற்புரை ஆற்றிய அன்புமணி(Anbumani), பொதுக்குழு உறுப்பினர் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். பொதுக்குழுவில் முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறோம். மருத்துவர் ராமதாஸ்(Dr Ramadoss) வழியில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும். நம்முடைய தலைவர் ராமதாஸ்தான், இதில் மாற்றுக் கருத்து இல்லை.
நம்பிக்கை வைத்தோருக்கு நன்றி :
தமிழகத்தில் உரிமைகளை மீட்டெடுப்போம் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். என் மீது நம்பிக்கை வைத்து ஓராண்டு காலம் பொறுப்பில் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி. பொறுப்புகள் பதவிகளை எதிர்பார்ப்பவன் நான் அல்ல என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். என் மீது நம்பிக்கை வைத்து வந்துள்ளீர்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது. பாமக நிறுவனர் ராமதாஸின் கனவுகளை லட்சியங்களை நாம் நிறைவேற்றுவோம்.
திமுக ஆட்சிக்கு வரக்கூடாது :
ராமதாஸ்(Ramadoss) அவர்களை சுற்றி குள்ளநரி கூட்டம் ஒன்று இருக்கிறது. அவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அடுத்த ஆறு மாதங்கள் கடினமான காலம். ஓய்வு பாராமல் உழைத்தால் நமது வெற்றி நிச்சயம்.
மேலும் படிக்க : பாமக தலைவராக அன்புமணி தொடர்வார் : பொதுக்குழு அதிரடி தீர்மானம்
யாருடன் கூட்டணி, அன்புமணி சூசகம் :
யாருடன் நாம் கூட்டணி(PMK Alliance Announcement) அமைக்க போகிறோம் என்பதை ஓரிரு நாட்களில் முடிவு எடுத்து விடலாம். நமது வெற்றிக்கு எப்படி பாடுபட போகிறோம் என்பதே முக்கியம். பொதுக்குழுவை நடத்தலாம் என நீதிமன்றம் அனுமதி வழங்கியதை கனத்த இதயத்துடன் தான் ஏற்றேன். எனக்கும் வலிகள் அதிகம், உங்களிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. என் வேதனை உங்களுக்கு புரியம் என்று நினைக்கிறேன்” இவ்வாறு அன்புமணி பேசினார்.
=====