
தங்கம் விலை ஏற்ற இறக்கம் :
Gold Rate Today in Chennai : சர்வதேச விவகாரங்கள், கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் இதுவரை இல்லாத அளவு ஒரு சவரன் ரூ.75.200 என்ற உச்சத்தை தொட்டு அதிர வைத்தது தங்கம். அண்மைக் காலமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. அதிரடியாக உயர்வதும், பின்னர் சீரான விலையில் இறங்குவதாக இருக்கிறது. இன்னும் ஓராண்டில் தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்தை தொட்டாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர் வல்லுநர்கள்.
தங்கம் விலை சரிவு :
வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. இந்தநிலை இன்றும் நீடிக்கிறது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் குறைந்தது :
ஒரு கிராம் ரூ.70 குறைந்து, ரூ.9,295க்கும் விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.126க்கும், ஒரு கிலோ ரூ.1,26,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க : Gold Price Today: தங்கம் சவரன் ரூ.75,760 : வரலாற்றில் புதிய உச்சம்
தங்கம் விலையில் சீரான மாற்றம் :
2 நாட்களாக தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் அடுத்து வரக்கூடிய வர்த்தக நாட்களில் தங்கத்தின் விலையில் சீரான மாற்றங்கள் காணப்பட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்தாலும், தங்கத்தில் முதலீடு செய்வது குறையும் என்பதால், அப்போது விலை மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.
========================