ரூ. 500 நோட்டுகளையும் செல்லாததாக்க வேண்டும் : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை!

பணமதிப்பிழப்பு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ரூ.500 நோட்டுகளையும் தடை செய்ய வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
Andhra CM Chandrababu Naidu Demand Demonetisation Rs 500 Notes
Andhra CM Chandrababu Naidu Demand Demonetisation Rs 500 Notessource:google
1 min read

Andhra CM Chandrababu Naidu Demand Demonetisation Rs 500 Notes

பணமதிப்பிழப்பு 10 ஆண்டுகள் நிறைவு

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி கருப்புப் பணம், கள்ள நோட்டுகள் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில் புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்த நடவடிக்கை நடந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

சந்திரபாபு நாயுடுவின் புதிய கோரிக்கை

விஜயவாடாவில் இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

"டிஜிட்டல் கரன்சி அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தவர்களில் நானும் ஒருவன். இதனை விரைவாக பரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மோடியைக் கேட்டுக்கொண்டேன். மீண்டும் அதனை வலியுறுத்துகிறேன். தொடர்ந்து இந்தப் பிரச்சனையை எழுப்புவேன்.

ரூ. 500 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும். ரூ. 100 மற்றும் ரூ. 200 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்க வேண்டும்."

தொழில்நுட்பம் மற்றும் அரசியல் மாற்றம்

தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தினால், நாட்டின் வளத்தைப் பெருக்குவது கடினமாக இருக்காது என்றும் வறுமையை எளிதாக ஒழிக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சேவை அடிப்படையிலான அரசியல்

அமைப்புகள் குறைபாடு உள்ளதாக மாறி ஊழலுக்கு வழிவகுக்கிறது. இதற்குத் தடை ஏற்படுத்த விரும்புகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி, புதிய வகை அரசியல் டிரெண்டை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் என்பது பணத்தினால் இருக்கக்கூடாது; சேவை அடிப்படையில் இருக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ”சாட்டையை கையில் எடுப்பாரா விஜய்!” : சென்னைக்கு படையெடுக்கும் தவெக எம்எல்ஏக்கள் : நாளை ஆலோசனை, ஆக்சன் மோடில் தலைமை..!

===========