
நடிகர் ஸ்ரீகாந்த் கைது :
Actor Srikanth, Krishna Case Update : சென்னையில் தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
நடிகர் கிருஷ்ணாவும் கைது :
இந்த வழக்கில் அவரது நண்பர்கள் எனக் கூறப்படும் பிரதீப், கெவின் கைது செய்யப்பட்டார்கள். போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும்(Actor Krishna) தொடர்பு உள்ளது எனக்கூறி காவல்துறை தேடி வந்தனர். இதையடுத்து கிருஷ்ணா சரணடைந்தார். கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு :
இந்தநிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த்(Actor Krishna Bail) மற்றும் கிருஷ்ணா ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். நீதிபதி நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்ரீகாந்திடமிருந்து போதைப்பொருள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என வாதிட்டார்.
நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவ பரிசோதனையில் கிருஷ்ணா(Krishna Drug Case) போதைப்பொருள் பயன்படுத்தியதாக நிரூபிக்கப்படவில்லை என வாதிட்டார்.
நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு :
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஜாமீன் மனுக்கள் மீது இன்று தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி நிர்மல்குமார் அறிவித்து இருந்தார். அதன்படி, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா(Srikanth Krishna Case) இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ரூ.10 ஆயிரம் சொந்த ஜாமீன், அதே தொகைக்கு இருநபர் ஜாமீன் அளிக்க வேண்டும், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
=====