TN DGP Case : புதிய டிஜிபி நியமன விவகாரம் : UPSC-க்கு SC உத்தரவு

Supreme Court on TN DGP Selection Case Update : தமிழகத்தில் புதிய டிஜிபி நியமிக்கப்படும் விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை விரைந்து முடிக்க, யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Supreme Court on TN DGP Venkatraman Selection Case Update in Tamil
Supreme Court on TN DGP Venkatraman Selection Case Update in Tamil
1 min read

சட்டம், ஒழுங்கு பொறுப்பு டிஜிபி :

Supreme Court on TN DGP Selection Case Update : தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஆக.31ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் பொறுப்பு டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வெங்கட்ராமனை தமிழக அரசு நியமித்தது. அவரும் பொறுப்பு டிஜிபியாக தமது பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சீனியாரிட்டி முறை - நீதிமன்றத்தில் வழக்கு :

சீனியாரிட்டி அடிப்படையில் வெங்கட்ராமன் 9வது இடத்தில் தான் உள்ளார்(DGP Venkatraman), அவருக்கு முன்னதாக 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர் என்று விமர்சனங்கள் எழுந்தன. எனவே, வெங்கட்ராமன் நியமனத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு மீது குற்றச்சாட்டு :

புதிய டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன்பாகவே தகுதியான புதிய டிஜிபி பெயர்களை யுபிஎஸ்சிக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்(Tamil Nadu DGP). ஆனால் அதுபோன்ற நடைமுறைகளை தமிழக அரசு பின்பற்ற வில்லை என்று மனுவில் குற்றம்சாட்டப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை 2015ம் ஆண்டு பிரகாஷ் சிங் வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு புதிய டிஜிபி பதவிக்கான நியமன செயல்முறை நடந்து கொண்டிருப்பதாக கூறியது. இந்தநிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்,

* டிஜிபி நியமன நடவடிக்கைகளை யுபிஎஸ்சி ஆணையம் விரைவாக பரிசீலிக்க வேண்டும்.

மேலும் படிக்க : பொறுப்பு DGP நியமன விவகாரம் : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

* யுபிஎஸ்சி அளித்த பரிந்துரையின் பேரில், வழக்கமான முறையில் டிஜிபியை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in