
சிறுமி கொலை வழக்கு :
Daswant Hasini Rape Murder Case Update : சென்னை போரூரை அடுத்த மாங்காடு அருகே கடந்த 2017ஆம் ஆண்டு, 6 வயது பாலியல் வன்கொடுமை செய்து உடலை எரித்ததாக இளைஞர் தஷ்வந்த் மீது குற்றம்சாட்டப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது.
தாயை கொலை செய்த தஷ்வந்த்?
பின்னர் வீட்டில் இருந்த தனது தாயை அடித்துக் கொன்றுவிட்டு, நகைகளுடன் மும்பைக்கு பறந்தார். பலகட்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தை சுட்டிக்காட்டி தஷ்வந்துக்கு(Daswant Case Update) முன்னதாக ஜாமின் வழங்கப்பட்டது.
தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை :
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், 2018ம் ஆண்டு தஷ்வந்துக்கு, 46 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் மற்றும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவருக்கு இந்த தண்டனை(Daswant Death Sentence) விதிக்கப்பட்டது.
தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்
இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் மேற்முறையீடு செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தை நாடிய தஷ்வந்த் தூக்கு தண்டனை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
தூக்கு தண்டனை ரத்து
இந்த வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளது. சிசிடிவி காட்சிகள் மற்றும் டிஎன்ஏ மாதிரிகள் போதிய அளவில் தஷ்வந்துக்கு எதிராக இல்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறார்கள். முறையான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்தும் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்து இருக்கிறது.
தாயைக் கொலை செய்த வழக்கிலும் விடுதலை
இதனிடையே, தனது தாயை தஷ்வந்த் கொலை செய்த வழக்கில், அவரது தந்தை முக்கிய சாட்சியாக இருந்து வந்தார். இந்த வழக்கு செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தந்தையின் சாட்சி பிறழ் சாட்சியாக மாறியதால், கொலை வழக்கில் போதிய சாட்சி இல்லை எனக் கூறி தஷ்வந்த் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐ வசம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில் தஷ்வந்த் விடுவிக்கப்பட்டது தமிழகத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
========