

Talks on joining TVK: Is a famous actor set to become the Kerala state leader?
தென்னிந்தியத் திரைப்படங்களில் பிரபலமான நடிகர் தேவன். இவர் பாஜகவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு?
தவெகவின் கேரள மாநிலத் தலைவராக அவரை நியமிப்பது குறித்த முதல்கட்டப் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியல் பயணம் மற்றும் பாஜகவிலிருந்து விலகல்
நடிகர் தேவன் 2004-இல் 'கேரள மக்கள் கட்சி' என்ற கட்சியைத் தொடங்கி இயங்கி வந்தார். பின்னர் 2021-இல் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார்.
இருப்பினும், ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகளைப் பின்பற்றி அரசியல் செய்ய விரும்பிய அவருக்கு பாஜகவில் அதற்கான சூழல் அமையாததால், சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகினார்.
தவெகவில் புதிய பொறுப்பு?
பாஜகவிலிருந்து விலகிய நிலையில், கேரளாவில் தவெகவின் கிளையைத் தொடங்கி அதை வழிநடத்த தேவனுடன் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சாலக்குடியில் உள்ள நடிகர் தேவனின் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் நேரில் சந்தித்து சுமார் 3 மணி நேரம் ஆலோசித்தனர்.
மாநிலத் தலைவர் பதவி
சென்னையைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளுடன் கூகுள் மீட் மூலம் நடந்த ஆலோசனையில், அவருக்குக் கேரள மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்குவது குறித்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
விஜய்யுடன் சந்திப்பு
செப்டம்பர் 10-ஆம் தேதிக்குப் பிறகு சென்னையில் தமிழக முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேசிய பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்திய மாநிலம் முழுவதும் தவெக?
தென்னிந்திய மாநிலங்கள் முழுவதும் கட்சியின் அமைப்புகளை உருவாக்க தவெக திட்டமிட்டு வரும் சூழலில், முதல்வர் விஜய், நடிகர் தேவனுடன் 8 படங்களில் இணைந்து நடித்த பழக்கம் மற்றும் இருவருக்குமான நல்லுறவு ஆகியவை இக்கூட்டணிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க : ”பரந்தூர் விமான நிலையம்” : வளர்ச்சி திட்டங்களில் அரசியல் வேண்டாம் : தவெக அரசின் முடிவுக்கு திமுக கடும் எதிர்ப்பு...!
=====