கார்ப்பரேட் கம்பெனியாக ’அறநிலையத்துறை’ : நீதிமன்றம் விமர்சனம்

Madurai HC on Kasi Viswanathar Temple Case: கும்பாபிஷேகம் நடத்த இலக்கு நிர்ணயித்து, கார்ப்பரேட் நிறுவனம் போன்று, இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக, உயர்நீதின்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
Madurai HC Order on HRCE Department in Tenkasi Kasi Viswanathar Temple Kumbabishekam Case
Madurai HC Order on HRCE Department in Tenkasi Kasi Viswanathar Temple Kumbabishekam Case
1 min read

இந்து சமய அறநிலையத்துறை :

Madurai HC on Kasi Viswanathar Temple Case : தமிழகத்தில் உள்ள கோவில்களை, அரசின் ஒரு துறையான இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. கோயில்களில் மராமத்து பணிகள், திருவிழாக்கள், கும்பாபிஷேகம் உள்ளிட்டவை இந்த துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்(Kasi Viswanathar Temple Kumbabishekam) தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை(Madurai HC) தனது உத்தரவினை பிறப்பித்து உள்ளது.

நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த இறுதி உத்தரவு:

1. தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் புனரமைப்பு பணிகள் முழுமை பெறாமல் கும்பாபிஷேக விழா நடத்தப்படுகிறது.

2. ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்படுவதால், அறநிலையத்துறை கார்ப்பரேட் கம்பெனி போன்று செயல்படுகிறது.

3. இதன் காரணமாக, கோவில் நிர்வாகமும் கும்பாபிஷேக தேதியை(Kumbabishekam Date) முன்கூட்டியே முடிவு செய்து புனரமைப்பு பணிகளை அவசர கதியில் செய்கின்றன.

4. இதுபோன்ற நெருக்கடிகளால், கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதன் உண்மையான நோக்கம் சிதைகிறது.

5. கோவில்கள் வெறும் கட்டடங்கள் கிடையாது. அவை குடியிருக்கும் தெய்வங்களின் அங்கம். அதை உணர்ந்து அறநிலையத்துறை செயல்பட வேண்டும்.

7. புனரமைப்பு பணிகளை துவங்கும் முன்பு, சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறையிடம் கோவிலில் உள்ள பாதிப்புகள், சேதங்கள் அவற்றை சரி செய்ய தேவைப்படும் காலம் குறித்து விரிவான திட்ட அறிக்கை பெறப்பட வேண்டும்.

8. புனரமைப்பு பணிகளின் போது கனரக இயந்திரங்களை தவிர்த்து, அத்துறையால் அனுமதிக்கப்பட்ட பொருட்கள், ரசாயனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். பணிகள் முடிந்த பின் அத்துறையிடம் தகுதிச்சான்று பெற வேண்டியதும் அவசியம்.

9. கட்டமைப்பு பொறியியல் நிபுணர், தொல்பொருள் நிபுணர், பாதுகாப்பு நிபுணர், பாரம்பரிய ஸ்தபதி, இரு ஆகம நிபுணர்கள் அடங்கிய மாநில நிபுணர் குழுவிடம் பணி முடிந்ததற்கான சான்று பெற வேண்டும்.

10. அவற்றை கோவிலில் பார்வைக்கு வைக்க வேண்டும். அதன் பின்னரே நாள் குறித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

11. நன்கொடையாளர் சார்பில் நடத்தும் புனரமைப்பு பணிகளை, மாநில நிபுணர் குழு கண்காணிக்க வேண்டும், என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் படிக்க : திருவண்ணாமலையில் கட்டண உயர்வு : திமுக அரசுக்கு நயினார் கண்டனம்

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in