மகளுடன் சேர்ந்து ’மருத்துவ படிப்பு’ : சாதித்த தென்காசி பெண்மணி

Tenkasi Mother Daughter MBBS Seat : தென்காசியை சேர்ந்த தாயும், மகளும் ஒரே நேரத்தில் மருத்துவ படிப்பில் சேர இடம் பெற்று சாதனை படைத்து இருக்கிறார்கள்.
Tenkasi Mother And Daughter MBBS Seat in Virudhunagar Medical College Hospital
Tenkasi Mother And Daughter MBBS Seat in Virudhunagar Medical College Hospital
1 min read

தமிழகத்தில் MBBS கலந்தாய்வு :

Tenkasi Mother Daughter MBBS Seat : தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிக்கான நேர்முக கலந்தாய்வு சென்னையில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த, அமுதவல்லி என்ற 49 வயது பெண்ணுக்கு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில்(Virudhunagar) சீட் கிடைத்தது.

மகள் மூலம் மருத்துவ ஆர்வம் :

அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாயிணி நீட் தேர்வுக்கு படித்த போது, பாடங்களை னது தாயிடம் பகிர்ந்து உள்ளார். அதனால் ஏற்பட்ட ஆர்வத்தால் தாயும் நீட் தேர்வு எழுதிய அமுதவல்லி, 147 மதிப்பெண்கள் பெற்றார். 460 மதிப்பெண் பெற்ற அவரது மகள் சம்யுக்தாவும், மருத்துவக் கல்லூரியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.

மருத்துவராகும் 46 வயது பெண்மணி :

இந்த வயதில் மருத்துவம் படிப்பது பற்றி அமுதவல்லி கூறுகையில், ”ஒரு ஆர்வத்தில் தான் நீட் தேர்வுக்கு படித்தேன். 15 ஆண்டுகளுக்கு முன்பே எம்பிபிஎஸ்(MBBS) படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. அந்த நேரத்தில் பிசியோதெரபி படிப்பு தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது எனது மகளால் வாய்ப்பு கிடைத்தது. எனவே, நீட் தேர்வுக்கு(NEET Exam) நன்றாக படித்தேன், எனது மகள் முழு ஆதரவாக இருந்ததால், என்னால் சாதிக்க முடிந்தது” என்றார்.

அம்மா MBBS படிப்பது பெருமை :

தனது தாய்க்கு எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு கிடைத்தது குறித்து பெருமையுடன் பேசிய சம்யுக்தா கிருபாயிணி, “நான் நீட் தேர்வுக்கு படிக்கும் போது அம்மாவிடம் சொல்லிக் கொண்டே படிப்பேன். அம்மாவுக்கும் விருப்பம் இருந்தது. என்னுடன் சேர்ந்து படித்தார்கள். அதன் மூலம் இரண்டு பேரும் மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது” என்று கூறினார்.

குவியும் பாராட்டுகள் :

தாய், மகள்(Mother Daughter MBBS) இருவரும் ஒரே நேரத்தில் மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பைப் பெற்று சாதித்துள்ள மூலம், படிப்பிற்கு, 'வயது தடை இல்லை' என்பதை இருவரும் நிரூபித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in