
சூடுபிடிக்கும் தேர்தல் களம் :
Thirumavalavan About CM Post : தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கு 8 மாதங்கள் இருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஒரு பக்கம் பிரசார பயணங்கள் மறுபுறம் கூட்டணி என்று அரசியல் கட்சிகள் பிசியாக உள்ளன. விஜய்யின் வருகை. அரசியல் கட்சிகளுக்கு அழுத்தத்தை கொடுத்து இருக்கிறது.
காங்கிரசுடன் கருத்து வேறுபாடு :
இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “ மதச்சார்பின்மை கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியுடன் விடுதலை சிறுத்தைகளுக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், கொள்கைக்காக ஓரணியில் நிற்கிறோம்.
திமுகவுக்கு திருமா தேவையில்லை :
பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, 'தமிழகத்தை காப்போம்; மக்களை மீட்போம்' என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறுகிறார். புதிதாக நடைபயணம் கிளம்பியவர்கள் கூட, பாஜகவை ஆதரிப்பவர்கள் தான். திமுக சந்திக்கும்; திருமாவளவன் போன்றவர்கள் ஆதரவு திமுகவுக்கு தேவையில்லை.
முதல்வராகும் தகுதி இல்லையா? :
துணை முதல்வர் பதவி தருவதாக என்னை அழைக்கின்றனர். அப்படி என்றால், முதல்வர் பதவிக்கு நான் தகுதி இல்லாதவனா? நானும் ரவுடிதான் என்பது போல், யார் யாரோ கிளம்புகின்றனர். 35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எனக்கு, முதல்வர் ஆகும் தகுதி இல்லையா? என தொல். திருமாவளவன்(Thol. Thirumavalavan) கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க : திருப்பரங்குன்றம் கோயிலில் திருமா : கூட்டணிக்கு அச்சாரமா?
மூத்த தலைவர்களுடன் பழகியவன் :
கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், ராகுல் என அரசியலில் பயணித்துள்ள எனக்கு, துணை முதல்வர் பதவி ஆசை காட்டினால் சென்று விடுவேன் என நினைக்கின்றனர். ஆனால், திருமாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது. கொள்கையில் உறுதியாக நிற்பேன்” இவ்வாறு திருமாவளன் பேசினார்.
====