

கோவை மாணவிக்கு நேர்ந்த கொடுமை
Crime Against Women in Tamil Nadu : கோவையில் விமான நிலையம் அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு, மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஆண் நண்பரை தாக்கிய மூன்று பேரும், அந்தப் பெண்ணை கடத்தி சென்று இந்த கொடுமையை நிகழ்த்தினர். ஆண் நண்பர் அளித்த தகவலின் பேரில் போலீசார் மூன்று மணி நேரம் தேடிய பிறகு, அந்தப் பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சட்டம், ஒழுங்கு சீர்குலைவு
தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம், கோவை போன்ற பெருநகரங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற பேரச்சத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது. விமான நிலையம் அருகே நிகழ்ந்த இந்த கொடூரம், தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு மோசமாகி வருவதை அம்பலப்படுத்தி இருக்கிறது.
பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி?
கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்களுக்கு பெயர் போன கோவை நகரம், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கான மையமாக மாறி வருகிறது, பெண்களின் பாதுகாப்பிற்கு இங்கு நடைபெற்று வரும் நிகழ்வுகள் அச்சுறுத்தலை கொடுத்து வருகின்றன.
மடைமாற்றம் செய்யும் திமுக
தரவுகள் மற்றும் புள்ளி விவரங்கள் தமிழகத்தின் தற்போதைய நிலையை வெளிப்படுத்துவது போல அமைந்து இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகும் போதெல்லாம், திமுக அரசு தமிழ்நாட்டை வட மாநிலங்களுடன் ஒப்பிட்டு கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
4 ஆண்டுகளில் 60% அதிகரிப்பு
கடந்த நான்கு ஆண்டுகளில், அதாவது திமுக ஆட்சியில், இதுபோன்ற குற்றங்கள் 60% அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறையின் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்சோ வழக்குகள் மட்டும் 52% அதிகரித்து இருக்கிறது. இது தொடர்பாக 2020ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டை ஒப்பிட்டு பார்த்தால், கற்பழிப்பு 16 புள்ளி 6 சதவீதம் அதிகரித்து(Domestic Violence Against Women in Tamil Nadu) இருக்கிறது. துன்புறுத்தல்கள் 111 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
பாலியல் துன்புறுத்தல் 210% அதிகரிப்பு
அதாவது 2020ல் 892 வழக்குகள் பதிவான நிலையில், 2024ல் 1885 சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. இதேபோன்று பாலியல் துன்புறுத்தல்களும் 210 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை கூறுகிறது. பெண்களின் பாதுகாப்பில் அரசு எந்த அளவுக்கு அலட்சியமாக இருக்கிறது என்பதற்கு இந்த புள்ளி விவரங்களே சாட்சி.
ஆபத்தான நிலையில் தமிழகம்
மக்களை பாதுகாப்பதிலும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, காவல்துறையைப் பயன்படுத்தி அரசை விமர்சனம் செய்வோரை மௌனமாக்குவதையே திமுக வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இந்த அதிகாரத் துஷ்பிரயோகம் தமிழ்நாட்டை ஆபத்தான வீழ்ச்சியில் தள்ளியுள்ளது. அமைச்சர்கள் முதல் மூத்த காவல்துறை அதிகாரிகள் வரை, நீதியை உறுதி செய்வதற்குப் பதிலாக பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் செயல்படுகின்றனர்.
உள்துறைக்கு பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலின் வெறும் வார்த்தைப் பிரயோகத்தில் மட்டுமே ஈடுபடுகிறார். செயலில் அது காட்டப்படுவதே இல்லை. இதுபோன்ற சூழலில், தமிழகப் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பதாக உணர முடியும்?
அரசியலாகவே பார்க்கும் திமுக
இதற்கு முக்கிய காரணம், பெண்களைப் பாதுகாப்பதற்கும், நீதியை உறுதி செய்வதற்கும் அளிக்க வேண்டிய முக்கியவத்துத்திற்கு பதிலாக, திமுக தலைமை அரசியல் பார்வைக்கு முன்னுரிமை அளித்து எதிர்ப்புகளை அடக்குகிறது.
அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை பொறுப்பு ஏற்பதை, குற்றம் நடைபெறாமல் தடுப்பதை புறக்கணிப்பதால், பெண்களின் பாதுகாப்பு முழுமையாக கேள்விக்குறியாகும் சூழலை உருவாக்கி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-----