
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் :
Gold Silver Price Today in Chennai : உலகளாவிய பொருளாதாரத்தில் நிலையற்ற் தன்மை,பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வது மட்டுமே பாதுகாப்பானது என்பது உறுதியாகி இருக்கிறது. பொருளாதார நெருக்கடி நிலவும் காலங்களில், தங்கத்தின் மதிப்பு குறையாது, மாறாக அதிகரிக்கும்.
தங்கத்தின் முதலீடு :
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்கும், முதலீட்டாளர்களும் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய தங்கத்தை வாங்குவார்கள். இதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்வதை தடுக்க முடியாது.அதன்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றும் உயர்ந்து அசர வைத்துள்ளன.
கிராம் 9,985, சவரன் 78,440 :
22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9,725 இல் இருந்து ரூ.80 அதிகரித்து, ரூ.9,805 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் (8 கிராம்) ரூ.77,800 இல் இருந்து ரூ.640 அதிகரித்து, ரூ.78,440 ஆக விற்பனையாகிறது.
24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,697 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.85,576 க்கு விற்கப்படுகிறது.
18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,115 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.64,920 ஆக உள்ளது.
வெள்ளி கிராம் ரூ.137
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.137 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,37,000 ஆகவும் உள்ளது(Silver Rate Today). தங்கம் விலை உச்சத்தில் இருந்தாலும், நீண்ட கால முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : Gold Silver Price : 78,000ஐ நெருங்கியது தங்கம் : உச்சத்தில் வெள்ளி
கடந்த ஒன்பது நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 4 ஆயிரம் ரூபாய் உயர்ந்து இருக்கிறது(Gold Rate Today). வெள்ளி விலை 5 நாட்களில் ஒரு கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து உள்ளது.
=================