”விமர்சிப்பதில் நாகரீகம் வேண்டும்” : விஜய்க்கு சரத்குமார் பாடம்

Actor Sarathkumar on TVK Vijay 2nd Manadu Speech : கோடநாட்டில் தெருவில் நின்றபோது ஜெயலலிதா என்று சொல்லி இருப்பீர்களா என்று, நடிகர் விஜயை சரத்குமார் விளாசியுள்ளார்.
Actor Sarathkumar on TVK Vijay 2nd Manadu Speech
Actor Sarathkumar on TVK Vijay 2nd Manadu Speech
1 min read

விஜய் விமர்சனம் - எதிர்வினை :

Actor Sarathkumar on TVK Vijay 2nd Manadu Speech : மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டில் பேசி அக்கட்சியின் தலைவர் விஜய், பாஜக, திமுக, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் M.K ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து இருந்தார். அவரின் பேச்சுக்கு பாஜவினரும், திமுகவினரும் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

பெயர் சோல்லி அழைப்பதா? :

இந் நிலையில் கள்ளக்குறிச்சியில் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடிகர் சரத்குமார்(Actor Sarathkumar) கலந்து கொண்டார். அப்போது பேசிய நடிகர் சரத்குமார், ”அதிமுக ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை பெயர் சொல்லி அழைத்திருப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அரசியலில் ஒருவர் கத்துக்குட்டி :

ஊழலற்ற அரசாங்கம், வெளிப்படைத்தன்மையான ஆட்சியை நடத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் பிரதமர் மோடி. அப்படிப்பட்ட ஒருவரை அரசியலில் கத்துக்குட்டியான ஒருவர் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று அழைக்கிறார்.

விஜய்க்கு தைரியம் இருக்கா? :

நீங்கள் (நடிகர் விஜய்) கோடநாட்டிலே தெருவிலே நின்று கொண்டு இருக்கும் போது மிஸ். ஜெயலலிதா ஜெயராம் என்று சொல்லியிருப்பீர்களா? என்ன தவறு என்று கேட்கிறீர்கள்? இன்றைக்கு மிஸ். ஜெயலலிதா ஜெயராம் என்று சுட்டிக்காட்டி சொல்லி பாருங்கள்.. சொல்லி பாருங்களேன் என்று சவால் விடுத்தார்.

விஜய் என்ன சிங்கமா? :

சிங்கம் வேட்டைக்கு மட்டும் போகுமா? அப்புறம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூங்கி விடுமா? சிங்கம்னா சிங்கமாக இருக்கணும். தூங்குகின்ற சிங்கமா இருக்கக்கூடாது. தன்மையற்று பேசியதால் விமர்சிக்க வேண்டி இருக்கிறது.

விமர்சிப்பதில் தரம் அவசியம் :

முதல்வரை அங்கிள் என்று அழைப்பேன் என்கிறார். என்னை அழையுங்கள், தவறில்லை. ஆனால், பிரதமர், முதல்வர் பதவியில் இருப்பவர்களை விமர்சிப்பதில் நாகரீகம் அவசியம். அவர்கன் மக்களின் பிரதிநிதிகள், அவர்களை விமர்சிக்கும் போது கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மனிதருக்கு மரியாதை கொடுக்கிறீர்களோ இல்லையோ அந்த பதவிக்கு மரியாதை கொடுத்தாக வேண்டும்.

மேலும் படிக்க : கொள்கையற்ற ’விஜய்’, கொள்கை பிடிப்பில் ’பாஜக’: எச். ராஜா விமர்சனம்

அந்த தரத்தை கற்றுக் கொள்ளுங்கள் விஜய்(TVK Vijay) அவர்களே. நல்ல கருத்தை சொல்லும்போது ஏன் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்கிறீர்கள். தைரியம் என்றால் என்னிடம் வந்து பேசி பாருங்கள்” இவ்வாறு சரத்குமார் கடுமையாக சாடினார்.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in