’அரசியல் காழ்ப்புணர்ச்சி,குறுகிய மனப்பான்மை’: முதல்வரை சாடிய விஜய்

TVK Vijay Speech in TVK General Committee Meeting 2025 : தவெக மீது சட்டசபையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி, குறுகிய மனதுடன் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியதாக, விஜய் தெரிவித்து இருக்கிறார்.
TVK Vijay stated that CM Stalin accused TVK on political bias, narrow-mindedness in Assembly
TVK Vijay stated that CM Stalin accused TVK on political bias, narrow-mindedness in Assembly Google
1 min read

தவெக சிறப்பு பொதுக்குழு

TVK Vijay Speech in TVK General Committee Meeting 2025 : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் நிறைவுரையாற்றிய அக்கட்சியின் தலைவர் விஜய், “ என் நெஞ்சில் குடியிருக்கும் எனது தோழர்களுக்கும், தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் என்னுடைய வணக்கம். நம்ம குடும்ப உறவுகளை இழந்த காரணத்தினால், சொல்ல முடியாத வேதனையிலும், வலியிலும் இருந்தோம்.

வன்ம அரசியலை பரப்பப்பட்டது

அமைதி காத்து வந்த நேரத்தில் நம்மை பத்தி, வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டது. இதை எல்லாம் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணை கொண்டு துடைத்து எறியத்தான் போகிறோம்.

தமிழக சட்டசபையில் நமக்கு எதிராக நிகழ்ந்தப்பட்ட ஒரு உரைக்கு, ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

சட்டசபையில் முதல்வர் பேச்சு

அரசியல் செய்ய விருப்பம் இல்லை என்று அடிக்கடி சொல்லும் முதல்வர் நம்மை குறிப்பிட்டு பல்வேறு அவதூறுகளை பதிவு செய்தார்.

பெருந்தன்மையை பெயர் அளவில் மட்டும் பேசும் முதல்வர், அக்டோபர் 15ம் தேதி சட்டசபையில் நமக்கு எதிராக பேசிய பேச்சில், எவ்வளவு வன்மத்தை வெளிப்படுத்தினார் என்பதையும், எப்படிப்பட்ட அரசியல் செய்ய முயல்கிறார் என்பதையும் தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள்?

அரசியல் காழ்ப்புணர்ச்சி, குறுகிய மனப்பான்மை

அரசியல் காழ்ப்புணர்ச்சி, குறுகிய மனதுடன் முதல்வர் நம் மீது குற்றம் சாட்டினார். அவர் பேசியது அனைத்தும் வடி கட்டிய பொய். வரும் 2026 தேர்தலில் திமுக, தவெக இடையே தான் போட்டி.

அலைகழிக்க தமிழக அரசு

கரூர் உடன் சேர்த்து ஐந்து,ஆறு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு எல்லாம் நடத்தி இருக்கிறோம். அங்கு எல்லாம் கடைசி நிமிடம் வரை எங்களுக்கு அந்த இடத்தில் அனுமதி கொடுப்பார்களா, மாட்டார்களா என்று தெரியாமல் இருக்கும். அந்த அளவு இழத்தடித்து தான் நமக்கு இடம் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு தவெக மீது அவர்களுக்கு வன்மம் இருக்கிறது.

2026ல் வெற்றி நமதே

திமுக கொடுக்கும் அனைத்து அழுத்தங்களையும் சந்திப்போம். 2026ல் 100 சதவீதம் நமக்கு தான் வெற்றி. நல்லதே நடக்கும் “ இவ்வாறு விஜய் பேசினார்.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in