ரத்து செய்யப்பட்ட தேர்வு
Venkata Priya IAS Appointed as New TNPSC Examination Controller : தமிழ்நாடு முழுவதும் குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் கடந்த 8-ம் தேதி காலையும், பிற்பகலும் நடைபெற இருந்த நிலையில் சென்னையில்தேர்வு மைய ஒதுக்கீடு குளறுபடியால் தேர்வுகள் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது
எந்தெந்த பணியிடங்களுக்கு தேர்வு
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர் உள்பட அரசுத் துறைகளில் காலியாக உள்ள 828 பணியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில் சென்னையில் ஏழு மையங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 38 மையங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மேலும் படிக்க :TNPSC : டிஎன்பிஎஸ்சி முதன்மை தேர்வுகள் ரத்து: பின்னணி என்ன
குளறுபடியால் நடவடிக்கை
தேர்வு மைய ஒதுக்கீடு குளறுபடியால் முதல்கட்ட விசாரணையை மேற்கொண்டு 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஒரு துணை செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் என்பவரும் அப்பதவியில் இருந்து மாதரம் செய்யப்பட்டார் .
புதிதாக பதவியேற்ற தேர்வு கட்டுப்பாடு அலுவலர்
இந்த நடவடிக்கையை தொடர்ந்து புதிய டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கட பிரியா என்பவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மேலும் படிக்க :TNPSC Group 2 Exam : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு