நீதிபதிகளின் கேள்வியில் திணறிய மனுதாரர்: 'வெற்றிப் பயணம்' திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

தமிழக அரசின் வெற்றிப் பயணம் திட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற்றதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Vetri Payanam Scheme Case Dismissed by Madras High Court
Vetri Payanam Scheme Case Dismissed by Madras High Courtsource:cmotamilnadu
1 min read

The Madras High Court dismissed the case filed against the Tamil Nadu government's 'Vetri Payanam' scheme after it was withdrawn.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் 'வெற்றிப் பயணம்' திட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கின் பின்னணி வருமாறு

தமிழ்நாடு முழுவதும் 12,600-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாகப் பயணம் செய்ய வகை செய்யும் 'வெற்றிப் பயணம்' திட்டத்தை அக்டோபர் 2-ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

தனியார் பேருந்து உரிமையாளர்

இத்திட்டத்தை எதிர்த்து, ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிமன்றத்தின் கேள்வி மற்றும் வழக்கு தள்ளுபடி

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

விசாரணையின் போது நீதிபதிகள், "ஈரோட்டில் 2 வழித்தடங்களில் மட்டும் பேருந்துகளை இயக்கும் நீங்கள் எப்படி ஒட்டுமொத்த திட்டத்தையும் எதிர்த்து வழக்கு தொடர முடியும்?

பொதுநல வழக்காக கருத முடியாது

தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கைப் பொதுநல வழக்காகக் கருத முடியாது" என்று கேள்வி எழுப்பி அதிருப்தி தெரிவித்தனர்.

வழக்கு தள்ளுபடி

நீதிபதிகளின் இந்தக் கேள்வியைத் தொடர்ந்து, மனுதாரரான தனியார் பேருந்து உரிமையாளர் கலாமணி தனது மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால், வழக்கைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: மகளிர் 'வெற்றிப் பயணம்' திட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு: இன்று விசாரணை!

=========

logo
Thamizh Alai
www.thamizhalai.in