தேநீர் விருந்தில் பங்கேற்றதில் என்ன சர்ச்சை இருக்கிறது? கனிமொழி கேள்வி!

முன்பு மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த திமுக, தற்போது வெளிப்படையாகவே கூட்டணி அமைத்துள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்
What is the controversy in attending the tea party? Kanimozhi asks!
What is the controversy in attending the tea party? Kanimozhi asks!source: google
1 min read

What is the controversy in attending the tea party? Kanimozhi asks!

சபாநாயகரின் தேநீர் விருந்தில் பங்கேற்றது தொடர்பாகக் கனிமொழி எம்.பி. விளக்கமளித்துள்ள நிலையில், அமைச்சர் நிர்மல்குமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சபாநாயகரின் தேநீர் விருந்து

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவையொட்டி, மக்களவை எம்.பி.க்களுக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வழக்கமான முறையில் தேநீர் விருந்து அளித்தார்.

'இந்தியா' கூட்டணி புறக்கணிப்பும் திமுகவின் பங்கேற்பும்

இந்தத் தேநீர் விருந்தை எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி புறக்கணித்த நிலையில், திமுக சார்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி மட்டும் கலந்துகொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருந்தது.

சென்னை விமான நிலையத்தில் கனிமொழி விளக்கம்

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, "மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றதில் என்ன சர்ச்சை இருக்கிறது?

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகளை மாற்றுவது தொடர்பாக பேசுவதற்குத்தான் சென்றோம்" எனத் தெரிவித்த்துள்ளார்.

அமைச்சர் நிர்மல்குமார் கடுமையான விமர்சனம்

இதனிடையே, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "முன்பு மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த திமுக, தற்போது வெளிப்படையாகவே கூட்டணி அமைத்துள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சொத்துக்களைப் பாதுகாக்கவே சரணடைவு

மேலும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு அளித்த திமுக, நாடாளுமன்றத்தில் அதை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக கூறவில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தங்கள் குடும்ப சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளவே பாஜகவிடம் சரணடைந்துள்ளதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க : சுதந்திர தினம்: தமிழகத்தைச் சேர்ந்த 20 காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருதுகள்: 3 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்!

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in