ஆப்கனை உலுக்கிய நிலநடுக்கம் : 800 பேர் பலி, 2,500 பேர் படுகாயம்

Afghanistan Earthquake Casualties Death News Tamil : ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 800ஐ தாண்டி உள்ளது.
Afghanistan Earthquake Casualties Death News Tamil
Afghanistan Earthquake Casualties Death News Tamil
1 min read

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :

Afghanistan Earthquake Casualties Death News Tamil : இந்தியாவின் அண்டை மாநிலம் ஆப்கானிஸ்தான். இதன் கிழக்கு பகுதியை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. முதலில் ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவான நில நடுக்கம், 2வது முறையும் ஏற்பட்டு 4.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கங்கள், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியை தலை கீழாக புரட்டி போட்டன.

தரைமட்டமான கட்டிடங்கள் :

சீட்டு கட்டுகளை போன்று கட்டிடங்கள் தரை மட்டமாகின. கண் இமைக்கும் நொடியில் கட்டிடங்கள் தகர்ந்ததில், இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கினர். இதுவரை 800 உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன(Afghanistan Earthquake Death). இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

600 பேர் பலி, 2,500 பேர் படுகாயம் :

காயமடைந்த நிலையில் 2,500க்கும் மேற்பட்டோர்(Afghanistan Earthquake Casualties) மீட்கப்பட்டு இருக்கிறார். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

நிலநடுக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பர்வான், காபூல், கபிசா, மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை தேடும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

துண்டிக்கப்பட்ட மலை கிராமங்கள் :

சாலைகள் முற்றிலும் சேதமடைந்து இருப்பதால், மீட்பு படையினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று சேருவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலைகளை ஒட்டி பகுதிகளில் உள்ள கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு இருக்கின்றன. அங்குள்ள மக்கள் என்ன ஆனார்கள் என்பது மீட்பு படையினர் சென்றால்தான் தெரிய வரும்.

மேலும் படிக்க : ரஷ்யா, ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் : அச்சுறுத்திய சுனாமி அலைகள்

ஆதரவு கேட்கும் ஆப்கானிஸ்தான் :

ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு, சக்தி வாயந்த நிலநடுக்கம்(Afghan Earthquake Damage) மேலும் ஒரு சவாலாக எழுந்து இருக்கிறது. சர்வதேச நாடுகள் மனிதாபின உதவிகளை தந்தால் மட்டுமே, ஆப்கானிஸ்தானால், நிலைமையை ஓரளவு சரி செய்ய முடியும். எனவே, உலக நாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்து இருக்கிறது

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in