அரபு நாடுகள் மீதான தாக்குதல் தொடரும் : அமெரிக்க தளங்களே இலக்கு! : ஈரானின் புதிய தலைவர் மோஜ்தபா காமேனி அறிவிப்பு!

Mojtaba Khamenei Iran Attack Gulf Countries : ஈரானின் புதிய உச்ச மதகுருவாக பொறுப்பேற்றுகொண்ட மோஜ்தபா காமேனி அண்டை அரபு நாடுகள் மீதான இந்த தாக்குதல் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
Attacks on neighboring Arab countries will continue: Iran's new leader Mojtaba Khamenei announces
Attacks on neighboring Arab countries will continue: Iran's new leader Mojtaba Khamenei announcesgoogle
1 min read

தொடரும் ஈரான் இஸ்ரேல் போர்

Mojtaba Khamenei Iran Attack Gulf Countries : ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குல் தொடர்ந்து நீடித்து கொண்டே இருக்கிறது .இதனால் ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது

அரபு நாடுகள் மீதம் தாக்குதல் தொடரும்-மோஜ்தபா காமேனி

அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் ஈரான் உச்​ச மதகுருவான அயத்​துல்லா அலி காமேனி உயி​ரிழந்​தார். இதையடுத்து ஈரானின் புதிய உச்​சத் தலை​வ​ராக அயத்​துல்லா அலி காமேனி​யின் மகன் மோஜ்தபா காமேனி (56) அண்​மை​யில் தேர்​வா​னார்.

மூத்த மதகுரு இழப்பு மற்றும் பல எண்ணிக்கையிலான குழந்தைகளின் இழப்பு ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இதற்கு பதிலடியாக அரபு நாடுகள் மீதான தாக்குத்தால் தொடரும் என்றும் அறிவிப்பு விடுத்துள்ளார்

மோஜ்தபா காமேனியின் முதல் அறிவிப்பு

ஈரானின் புதிய மதகுருவாக பதியேற்றுள்ள மோஜ்தபா காமேனி தனது புதிய அறிவிப்பாக வளை​கு​டா​விலுள்ள அரபு அண்டை நாடு​கள் மீதான தாக்​குதல்​களை ஈரான் தொடரும் என்றும் , அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலுக்கு எதி​ரான ஒரு தாக்​குதலாக, ஹார்​முஸ் ஜலசந்​தியை தொடர்ந்து மூடிவைப்​போம் என்றும் எச்சரித்துள்ளது

மேலும் படிக்க :ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் : 1,000ஐ தாண்டிய உயிரிழப்பு : தற்போதைய நிலவரம் என்ன?

அமெரிக்க, இஸ்​ரேல் தாக்​குதலில் ஒரே நேரத்​தில் 165 பள்ளி மாணவி​களை இஸ்ரேல் இழந்திருக்கிறது இந்த தாக்​குதல் உட்பட எங்​களைத் தாக்​கிய​வர்​களுக்கு நாங்​கள் பதிலடி கொடுப்​போம்.

எங்​கள் நாட்​டின் மீதான தாக்​குதலுக்கு நாங்​கள் பழி​வாங்​கு​வோம் என்று மோஜ்தபா காமேனி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குல் தொடர்ந்து நீடித்து கொண்டே இருக்கிறது .இதனால் ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in