

தீபாவளி பண்டிகை
Canada Post Launch Special Stamp on Diwali Festival 2025 : இந்தியாவில் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் தீபாவளி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
உலகெங்கும் தீபாவளி பண்டிகை
இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை, மாலத்தீவு போன்றவற்றிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. கனடா அரசு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை கொண்டாடி வருகிறது, அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலும் குத்து விளக்கு ஏற்றப்பட்டு பாரம்பரிய முறைப்படி தீபாவளி கொண்டாடப்பட்டது.
கனடா சிறப்பு தபால்தலை
பன்முக கலாச்சார திருவிழாவான தீபாவளியை சிறப்பிக்கும் வகையில் கனடா அரசு 2017ம் ஆண்டு முதல் சிறப்பு தபால்தலையை வௌியிட்டு வருகிறது. அதன்படி8வது ஆண்டாக இந்த ஆண்டும் தீபாவளிக்கான சிறப்பு தபால்தலையை கனடா போஸ்ட் வௌியிட்டுள்ளது. இதில் ரங்கோலி கோலமும், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ’தீபாவளி’ என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க : Diwali : 6 லட்சம் கோடிக்கு உள்ளூர் பொருட்கள் : இந்தியர்கள் சாதனை
கனடா அரசு பெருமிதம்
இதுகுறித்து கனடா போஸ்ட் வௌியிட்ட செய்திக்குறிப்பில், “கனடா நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் விதமாக, கனடாவிலும், உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பிற சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையான தீபாவளியை குறிக்கும் சிறப்பு தபால்தலையை வௌியிடுவதில் பெருமை அடைகிறோம் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த ரித்து கனால் ( Ritu Kanal ) என்ற கலைஞர் சிறப்பு தபால்தலையை வடிவமைத்தார்.
=============