ஹோர்முஸ் நீரிணை மூடல் எதிரொலி : பாதிப்புக்கு உள்ளாகும் அன்றாட வாழ்க்கை : ஐ.நா. எச்சரிக்கை

Iran Israel War: ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக முக்கிய கப்பலை வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அன்றாட உணவு வாழ்க்கைச் செலவுகள் அதிகரிக்கும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
Daily life to be affected by the impact of the closure of the Strait of Hormuz: UN warns
Daily life to be affected by the impact of the closure of the Strait of Hormuz: UN warns google
2 min read

போர் எதிரொலி

Iran closes Strait of Hormuz : ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா இடையே தொடரும் போர் பதற்ற சூழல் காரணமாக ஈரான் முக்கிய கப்பல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது ,இது உலக நடுகல் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காத்திருக்கும் கப்பல்கள்

ஓமன் கடற்கரை பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று தாக்கப்பட்டிருப்பது, போரின் தீவிரத்தை காட்டுகிறது. ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் நங்கூரமிட்டு காத்திருக்கின்றன.

ஹோர்முஸ் நீரிணை ஏன் முக்கியமாக பார்க்கப்படுகிறது

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த நீர்ச்சந்தி, உலக எரிசக்தி தேவையின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.இதன் அகலம் மிகக் குறுக்கியதாக இருக்கும். கப்பல்கள் செல்லும் பாதை வெறும் 3 கி.மீ மட்டுமே.

மேலும் படிக்க : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா ”கச்சா எண்ணெய் வாங்கலாம்” : 30 நாட்கள் தற்காலிக அனுமதி அளித்த அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணை மூடலும் உலகளாவிய பாதிப்பும்

ஹோர்முஸ் நீரிணை மூடல் விளைவின் காரணமாக பல துறைகளும் பாதிப்பை சந்தித்து வருகிறது .அந்த வகையில் எரிசக்தி சந்தைகள், கடல்சார் போக்குவரத்து மற்றும் உலகளாவிய விநியோகச் உற்பத்தி ,ஏற்றுமதி சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

இதனால் அதிக எரிசக்தி, உரம், போக்குவரத்துச் செலவுகள் காரணமாக, உணவுப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைத் தீவிரப்படுத்தக்கூடும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐநாவின் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், உணவுப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட உலகளாவிய வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க ஆபத்துகள் மற்றும் அன்றாட வாழ்விற்கான பாதிப்பு ஏற்படும் என்று ஐநா அவையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க : ஹார்முஸ் ஜலசந்திக்குப் பதிலாக செங்கடல் வழியாக எண்ணெய் வர்த்தகம் : அராம்கோ முடிவு

கச்ச எண்ணெய் ஏற்றுமதி கடும் பாதிப்பு

ஒரு நாளைக்கு சுமார் 20 மில்லியன் பீப்பாய்கள் உலகளாவிய கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் தோராயமாக 25 சதவிகிதம் ஹோர்மூஸ் நீரிணை வழியாக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது

அவற்றில் 14.3 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யில் 84 சதவிகிதம், ஆசியாவை நோக்கியும், 16 சதவிகிதம் மட்டும் ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளை வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளது உலகவில் கச்ச எண்ணெய் பாதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துள்ளது .

பல வளரும் நாடுகள், தங்களின் கடன் சுமையை அடைக்க முயற்சித்து வரும்நிலையில், தற்போது ஹோர்முஸ் நீரிணையும் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது.

மேலும் படிக்க : Strait of Hormuz | உலக பொருளாதாரத்தை அசைக்கும் ஹார்முஸ் நீரிணை : ஈரான் முடிவால் இந்தியா, சீனா பாதிப்பு!

சமையல் எரிவாயுவிலும் கடும் பாதிப்பு

ஈரானின் தொடர் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் உற்பத்தியாகும் சமையல் எரிவாயு உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதால் இந்தியாவிற்கு இறக்குமதியாகும் சமையல் எரிவாயு மிகப்பெரிய தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. இது அன்றாட உணவு தேவையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிபிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in