ஹோர்முஸ் நீரினை : ”இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி” : எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

Iran approves sending fuel tanker to India via Strait of Hormuz : எரிபொருள் கப்பலை ஹோர்முஸ் நீரினை வழியாக இந்தியாவிற்கு அனுப்ப ஈரான் ஒப்புதல் வழங்கியுள்ளது.
Iran approves sending fuel tanker to India via Strait of Hormuz
Iran approves sending fuel tanker to India via Strait of Hormuzgoogle
1 min read

45 % எரிபொருளை இறக்குமதி செய்யும் இந்தியா

Iran approves sending fuel tanker to India via Strait of Hormuz : ஹோர்முஸ் நீரினை வழியாக 45 % எரிபொருளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது .ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா தொடர் போரால் நீரினை மூடப்பட்டதால் இந்தியாவிற்கான கச்ச எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஒப்புதல் வழங்கிய ஈரான்

தொடர் ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போரால் இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ,ஈரான் அமைச்சர் அராக்கசியுடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்பு கொண்டு பேசிய நிலையில் ஹோர்முஸ் நீரினை வழியாக இந்திய கப்பல்களை அனுமதிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது

மேலும் படிக்க : Strait of Hormuz | உலக பொருளாதாரத்தை அசைக்கும் ஹார்முஸ் நீரிணை : ஈரான் முடிவால் இந்தியா, சீனா பாதிப்பு!

எரிபொருள் தடையின்றி கிடைக்க வாய்ப்பு

ஈரானின் இந்த ஒப்புதலுக்கு பிறகு இந்தியாவிற்கு கச்ச எண்ணயை தடையின்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இனி தட்டுப்பாடு குறித்து கவலை வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது .

மேலும் ஐரோப்பா ,அமெரிக்காவிற்கான எரிபொருள் கப்பலை ஹார்மோஸ் நீரினை வழியாக ஈரான் இன்னும் அனுமதிக்காது குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணை ஏன் முக்கியமாக பார்க்கப்படுகிறது

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த நீர்ச்சந்தி, உலக எரிசக்தி தேவையின் முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.இதன் அகலம் மிகக் குறுக்கியதாக இருக்கும். கப்பல்கள் செல்லும் பாதை வெறும் 3 கி.மீ மட்டுமே என்பதால் இதன் வழியாக எரிபொருள் கப்பலை போக்குவரத்தை உலக நாடுகளை மேற்கொள்ளகின்றன

மேலும் படிக்க : ஹோர்முஸ் நீரிணை மூடல் எதிரொலி : பாதிப்புக்கு உள்ளாகும் அன்றாட வாழ்க்கை : ஐ.நா. எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை மூடலும் உலகளாவிய பாதிப்பும்

ஹோர்முஸ் நீரிணை மூடல் விளைவின் காரணமாக பல துறைகளும் பாதிப்பை சந்தித்து வருகிறது .அந்த வகையில் எரிசக்தி சந்தைகள், கடல்சார் போக்குவரத்து மற்றும் உலகளாவிய விநியோகச் உற்பத்தி ,ஏற்றுமதி சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

இதனால் அதிக எரிசக்தி, உரம், போக்குவரத்துச் செலவுகள் காரணமாக, உணவுப் பொருள்கள் மற்றும் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைத் தீவிரப்படுத்தக்கூடும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in