ஈரானுக்கு எதிரான தாக்குதல் அமெரிக்கர்களை சோர்வடைய வைத்திருக்கிறது : ஜனநாயகக் கட்சி குற்றச்சாட்டு!

Iran Israel US War : ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போர் குறித்து அமெரிக்கா எதிர் கட்சி தலைவர் ஸ்கூமர், அமெரிக்க மக்கள் இந்த போரை விரும்பவில்லை என்றும் அதனை டிரம்ப் கவனிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
Israel-US attacks on Iran are making Americans tired: Democratic Party alleges!
Israel-US attacks on Iran are making Americans tired: Democratic Party alleges! google
1 min read

ஈரான் இஸ்ரேல் நீடித்து வரும் போர்

Iran Israel US War in Tamil : ஈரான் இஸ்ரேல் அமெரிக்க நீடித்து வரும் போரால் ஈரானின் ‘ரெட் க்ரெசன்ட் சொசைட்டி’ (Red Crescent Society) (மார்ச் 2, 2026) வெளியிட்ட அறிக்கையின் படி ‘இஸ்லாமியக் குடியரசான ஈரானை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 555 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :அமெரிக்கா, இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு

போர் குறித்து பேசிய ட்ரம்ப்

ஈரான் மீதான தாக்குதல் பற்றி ஊடகங்களுக்கு பேட்டியளித்த டிரம்ப் ஈரானின் பரப்பளவு,ராணுவ நிலவரத்தைக் கணக்கில் கொண்டு போர் நிலவரத்தை கண்காணித்து வருவதாக கூறினார்.

இந்தத் தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல, அமெரிக்காவின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை போரின் வேகம் குறையப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க :லெபனானின் முக்கிய இடங்களை கைப்பற்ற வேண்டும் : இஸ்ரேல் படைகளுக்கு நெதன்யாகு உத்தரவு

போர் குறித்து உரையாற்றிய பேசிய ஜனநாயகக் கட்சி

நீடித்து வரும் போர் குறித்து அமெரிக்காவின் செனட் அவையில் பேசிய ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஸ்கூமர், ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை என்று கூறினார்.

இந்த போர் தேவையற்றது என்று தெரிவித்த அவர், அமெரிக்கர்கள் பலர் உயிரிழப்பதையும் டிரம்ப் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஸ்கூமர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரண சூழல் அமெரிக்கர்களை சோர்வடைய வைத்திருப்பதாகவும் ஜனநாயகக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க :Strait of Hormuz | உலக பொருளாதாரத்தை அசைக்கும் ஹார்முஸ் நீரிணை : ஈரான் முடிவால் இந்தியா, சீனா பாதிப்பு!

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in