
மடகாஸ்கர் - இளைஞர்கள் போராட்டம்
Madagascar Gen Z Protests News in Tamil : கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மடகாஸ்கர். அதிபர் அண்ட்ரே ரஜோலினாவின் ( Andry Rajoelina ) தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்நாட்டில் GEN-Z மடகாஸ்கர் என்ற இளைஞர் குழு அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தது.
நாடு தழுவிய போராட்டம்
இந்த கிளர்ச்சி தற்போது அரசுக்கு எதிராக வெடித்து இருக்கிறது. ஊழல், வறுமை போன்ற பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகிறது.இளைஞர்களுக்கு ஆதரவாக மடகாஸ்கர் ராணுவத்தின் கெப்செட் எனப்படும் முக்கிய படைப்பிரிவும் அரசுக்கு எதிராக திரும்பி நிற்கிறது.
தப்பியோடிய மடகாஸ்கர் அதிபர்
இதனால் அதிபர் ரஜோலினா நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அவர் பிரான்ஸ் ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதை இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதிபர் ரஜோலினா இனி நாடு திரும்பக் கூடாது, இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.
மாற்றம் கொண்டு வரும் GEN-Z இளைஞர்கள்
நேபாளம், வங்கதேச நாடுகளில் GEN-Z இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் மூன்றாவது நாடாக மடகாஸ்கரிலும் இளைஞர்களுக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது.
மேலும் படிக்க : Nepal ஆட்சியை கலைக்கவே கிளர்ச்சி வன்முறை: பின்னணியில் "USA, CHINA"
அதிபர் நீக்கம், ராணுவம் கையில் ஆட்சி
அதிபர் ரஜோலினாவை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இளைஞர்களுடன் கைகோர்த்த ராணுவத்தின் ஒரு படைப்பிரிவு தற்காலிகமாக நாட்டை வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-------