
பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் :
Military Rule in Pakistan : இந்தியாவின் எதிரியாகவே தன்னை சித்தரித்துக் கொள்ளும் பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பகிரங்கமாகவே ஆதரித்து வருகிறது. முகாம்களை அமைத்து தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, தெற்காசியாவின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறது.
அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் பாகிஸ்தான் அரசியல்(Pakistan Politics) காரணங்களுக்காக ஆதரித்தாலும், அந்நாட்டு பொருளாதாரம் எப்போதும் மேம்பட்ட நிலையை அடைந்ததே கிடையாது.
ஆட்சியை கைப்பற்றுமா ராணுவம்? :
இங்கு ராணுவம் ஆட்சியை(Military Rule) கைப்பற்றுவது என்பதும் அடிக்கடி நிகழ்வதுதான். ராணுவ தலைமை தளபதியாக இருப்பவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கைப்பற்றுவது காலம் காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் மீண்டும் ராணுவம் ஆட்சியை கவிழ்க்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராணுவ தளபதியின் பகீர் திட்டம் :
பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் உள்ளார். பாகிஸ்தான் அதிபராக ஆசிப் அலி சர்தாரி செயல்பட்டு வருகிறார். இப்படியான சூழலில் தான் பாகிஸ்தானில் ராணுவ புரட்சியை தொடங்கி அதிகார மாற்றத்துக்கு அந்த நாட்டின் ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர்(Asim Munir) திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிபராக இருக்கும் ஆசிப் அலி சர்தாரியை நீக்கிவிட்டு அந்த பொறுப்பை கைப்பற்ற அவர் திட்டமிட்டு காய்நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு பத்திரிகையாளர்கள் ‛‛பாகிஸ்தானின் நிலைமை மோசமாகி வருகிறது. அசீம் முனீர் அதிபராக பதவியேற்க காய் நகர்த்தி வருகிறார்.
பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் :
இந்த விவகாரத்தில் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினரின் பங்கு இருக்கிறதா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் பாகிஸ்தான் தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர்(Operation Sindoor) நடவடிக்கையை அந்நாட்டு மக்களே வரவேற்றது அதிபர் சர்தாரிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டு, சண்டை வேண்டாம் என்று இந்தியாவிடம் கேட்டுக் கொண்டது.
தோற்றாலும் தளபதிக்கு உயரிய விருது :
அப்படி இருந்தும் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு ‛பீல்ட் மார்ஷல்' என்ற பதவி வழங்கப்பட்டது. இது ராணுவத்தில் மிகவும் உயர்ந்த பதவியாகும். பாகிஸ்தானில் இதுவரை ஒருவர் மட்டுமே இந்த பட்டத்தை பெற்றிருந்தார். அவரது பெயர் அயூப் கான். இவர் ராணுவ ஜெனரலாக 1959ம் ஆண்டில் பணியாற்றினார். அதன்பிறகு அவர் அந்த நாட்டின் அந்த நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார். பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரியாக அவர் அழைக்கப்பட்டார்.
=====