மனிதனுக்கு பன்றி நுரையீரல் பொருத்தம் : சீன மருத்துவர்கள் சாதனை

Pig Lung to Human Transplant Research in China : சீனாவில் பன்றி நுரையீரலை மனிதருக்கு பொருத்தி மருத்துவ குழுவினர் ஆராய்ச்சி நடத்தி இருக்கிறார்கள்.
Pig Lung to Human Transplant Research in China
Pig Lung to Human Transplant Research in China
1 min read

Pig Lung to Human Transplant Research in China : உணவு முறைகளில் மாற்றம், சுற்றுச்சூழல் மாறுபாடு, மரபணு குறைபாடுகளால், மனிதனின் உடல் உறுப்புகள் செயலிழக்கின்றன. எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அதிகரித்து வருகின்றன. மூளைச்சாவு அடைவோரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, தேவைப்படுவோருக்கு பொருத்தப்படுகின்றன.

உயிரினக் கலப்பு பற்றி ஆராய்ச்சி :

ஆயினும் பற்றாக்குறை நிலவுவதால், உயிரினக் கலப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் உறுப்பு பற்றாக்குறை நெருக்கடியைப் போக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்காக பல்வேறு நாடுகளில் தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மனிதனுக்கு பன்றியின் நுரையீரல் :

அந்த வகையில், நமது அண்டை நாடான சீனாவில், பன்றியின் நுரையீரலை() மனிதர்களுக்கு பொருத்தி(Pig Lung to Human Transplant) அதன் செயல்பாடுகளை கண்காணிக்கும் ஆராய்ச்சி நடைபெற்றது. குவாங்ஜோவில் உள்ள மருத்துவப் பல்கலை மருத்துவமனையில்(Guangzhou Medical University Hospital) இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

மூளைச்சாவு அடைந்த ஒருவருக்கு, பன்றியின் நுரையீரல் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. பன்றியின் நுரையீரல்(Pig Lung To Human Lung) மனித நுரையீரல் அளவைக் கொண்டிருந்தது. மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஏற்றவாறு பன்றியின் நுரையீரலில் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன.

9 நாட்கள் சோதனை :

மூளை சாவு அடைந்த ஒருவருக்கு மூளையை தவிர பிற உடல் உள்ளுறுப்புகள் இயங்கும் என்பதால், பன்றியின் நுரையீரல் சுவாச குழாய் மற்றும் ரத்த நாளங்களுடன் இணைக்கப்பட்டு, அது ஒன்பது நாட்கள் வெற்றிகரமாக இயங்கியது.

ஆராய்ச்சியை தீவிரப்படுத்திய சீனா :

ஆரம்பத்தில் ஆக்ஸிஜன் பரிமாற்றம் சகஜமாக இருந்தாலும், 24 மணி நேரத்திற்கு பிறகு நுரையீரலில் திரவம் சேரத் தொடங்கியது. ஆறு நாட்களில் நோய் எதிர்ப்பு சகெதி பாதிக்கப்பட, 9 நாட்களுடன் சோதனை நிறுத்தப்பட்டது. இதன்மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஆராய்ச்சியை சீன மருத்துவர்கள்(Chinese Researcher) தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க : 3 நிமிடத்தில் முறிந்த எலும்புகளை ஒட்டலாம்: பசையை கண்டுபிடித்த சீனா

அமெரிக்காவில், டிம் ஆண்ட்ரூஸ், 67, என்ற நபருக்கு கடந்த மார்ச்சில் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்டது(Pig kidney Transplant To Human). அவர் ஆறு மாதங்களுக்கு மேல் உயிருடன் இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in