
ரணில் விக்கிரமசிங்கே :
Sri Lanka Former President Ranil Wickremesinghe Arrest : இலங்கையின் பிரதமர் மற்றும் அதிபர் பொறுப்புகளை வகித்தவர் ரணில் விக்கிரமசிங்கே. இலங்கை அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபராக பார்க்கப்படுகிறார். அதிபராக இருந்த போது 2022 முதல் 2024 ஆண்டு வரையிலான கால கட்டதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் சென்றிருந்தார்.
தனிப்பட்ட பயணம் - அரசு நிதி :
இதில் இங்கிலாந்து பயணம் தனிப்பட்ட பயணமாகும். ரணிலின் மனைவி பேராசிரியை மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றிருந்தார். இந்தப் பயணத்திற்கு அரசு நிதி(Sri Lanka Government Fund) பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்திய மதிப்பில் 4.97 கோடி ரூபாயை ரணில் செலவிட்டதாக கூறப்பட்டது.
ரணிலுக்கு எதிராக ஆதாரங்கள் :
இது தொடர்பான ஆதாரங்கள் ஜூன் 24ம் தேதி நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டன. ரணிலின்(Ranil Wickremesinghe) செயலாளர்களாக இருந்த சமன் ஏகநாயக்க, சாண்ட்ரா பெரோரா ஆகியோரும் வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் ரணில் விக்கிரமசிங்கே விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
ரணிலிடம் நீதிபதி விசாரணை :
விசாரணைக்கு ஆஜரான நிலையில், இங்கிலாந்து பயணம்(Ranil Wickremesinghe Case) பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. தனிப்பட்ட பயணத்திற்கு இலங்கை அரசின் நிதியை பயன்படுத்தவில்லை என்று ரணில் தெரிவித்தார். வாக்குமூலம் பதிவு நான்கரை மணி நேரம் நடைபெற்றது.
மேலும் படிக்க : இந்தியாவை மதிப்புமிக்க கூட்டாளியாக நடத்துங்க : டிரம்புக்கு அறிவுரை
ரணில் விக்கிரமசிங்கே கைது :
இதைத்தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக கைது(Ranil Wickremesinghe Arrest) செய்யப்பட்டார். கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அவர் சிறையில் அடைக்கப்படுவார். ரணில் கைது செய்யப்பட்டு இருப்பது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
====