தாய்லாந்து-கம்போடியா போர் நிறுத்தம் : மலேசியாவால் சுமூக முடிவு

Thailand Cambodia War Ceasefire : தாய்லாந்து கம்போடியே இடையே நடைபெற்று வந்த சண்டை, மலேசியா எடுத்த முயற்சியால் முடிவுக்கு வந்திருக்கிறது.
Thailand Cambodia War Ceasefire News Update in Tamil
Thailand Cambodia War Ceasefire News Update
1 min read

தாய்லாந்து - கம்போடியா சண்டை :

Thailand Cambodia War Ceasefire : தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே, நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இது கடந்த 24ம் தேதி மோதலாக வெடித்தது. எல்லையில் வைக்கப்பட்டு இருந்த கண்ணி வெடியில் சிக்கி தாய்லாந்து வீரர்கள் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான கம்போடியா மீது தாய்லாந்து ஏவுகணைகளை வீசியது. thailand-cambodia war 2025பதிலுக்கு கம்போடியாவும் தாக்குதல் நடத்த இருதரப்பிலும் 30 பேர் பலியாகினர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தார்கள். இருநாட்டு எல்லை பகுதியில் வசித்து வந்த ஒரு லட்சத்து 30 பேர் அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.

பிரச்சினைக்கு காரணமான கோவில் :

இந்தச் சண்டை காரணமாக தென்கிழக்கு ஆசியாவில் பதற்றம் தொற்றிக் கொண்டது. போராக மாறினால், நிலைமை மோசமாகும் என்று கணிக்கப்பட்டது. பிரச்சினைக்கு முக்கிய காரணம், எல்லையில் உள்ள ,இந்து - புத்த கோவில். இதை இரு நாடுகளும் உரிமை கோருகின்றன.

உலக நாடுகள் முயற்சி :

தாய்லாந்து கம்போடியா போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன. இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கு சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். ஐநா சபையும் தலையிட்டு சுமூக தீர்வு காணுமாறு அறிவுறுத்தியது.

மலேசியாவில் பேச்சுவார்த்தை :

இந்நிலையில், சண்டையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இரு நாட்டு தலைவர்களும் மலேசியாவில் சந்தித்து பேச்சு நடத்தினர். இதற்கு உடனடி பலன் கிடைத்தது. தாய்லாந்தும், கம்போடியாவும் பல நாட்களாக நீடித்த எல்லை மோதல்களை முடிவுக்கு கொண்டு வர ஒப்புக் கொண்டன. உடனடியாக போர்நிறுத்தம்(Thailand Cambodia War Ceasefire) செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் படிக்க : தாய்லாந்து-கம்போடியா ராணுவ மோதல் : அகதிகளாகும் அப்பாவி மக்கள்

போர் நிறுத்தம் அமல் :

இதனை மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மலேசியா மேற்கொண்ட முயற்சியால் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்கும், அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்குமான நடவடிக்கையின் முதல்படி என்றும் அன்வர் கூறினார்.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in