
அதிபர் டொனால்டு ட்ரம்ப் :
US President Donald Trump Health Issue : அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் இதற்கு முன்பு மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தவர். குடியரசு கட்சி சார்பில் ஏற்கனவே ஒரு முறை அதிபராக இருந்த அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரானார். சர்ச்சைகளுக்கு பெயர் போன அவர், கால்களில் லேசான வீக்கம் ஏற்பட்டதால், மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார்.
அரியவகை நரம்பு நோய் :
டொனால்ட் ட்ரம்புக்கு “குரோனிக் வீனஸ் இன்சஃபிஷியன்சி”(Chronic Venous Insufficiency) என்கிற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தீவிரமான உடல்நல பிரச்சினை இல்லை என்றும், இரத்த உறைவு அறிகுறி இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த நோய் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. CVI என்பது கால்களில் உள்ள நரம்புகள் இது இரத்தத்தை இதயத்திற்கு திறம்பட எடுத்து செல்ல முடியாத நிலையாகும்.
மேலும் படிக்க : மாஸ்கோவை தாக்க முடியுமா?: ஜெலன்ஸ்கியை உசுப்பும் அதிபர் ட்ரம்ப்
வயது மூப்பால் வரும் பிரச்சினை :
இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நரம்பு தொடர்பான பிரச்சனை பொதுவானதாக உள்ளது. டொனால்ட் ட்ரம்புக்கு(Donald Trump Age) 79 வயதாவதால், அவருக்கு நரம்பு தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தீவிர பாதிப்பில்லை, பணிகளை தொடரலாம் :
தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், டொனால்ட் ட்ரம்பு-க்கு தீவிர பாதிப்பு இல்லை என்றும் வெள்ளை மாளிகை(White House) விளக்கம் அளித்துள்ளது. உடல் ஆரோக்கியத்துடன் டொனால்ட் ட்ரம்ப் இருப்பதால், அவர் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
====