

உலகை ஆளும் ஏஐ தொழில்நுட்பம்
World First AI Powered Fighter Jet : உலகளவில் ஏஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில் பாதுகாப்பு படையின் ஒரு அங்கமான, விமானப்படையும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.
ஏஐ போர் விமானம் உருவாக்கம்
அந்த வரிசையில், அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம், உலகின் முதல் செயற்கை நுண்ணறிவால் (AI) இயக்கப்படும் போர் விமானத்தை உருவாக்கி அசத்தி இருக்கிறது XQ-58A Valkyrie என்று அழைக்கப்படும் இந்த விமானம், பைலட் இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது. மேலும், இது ரன்வே தேவையில்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் திறன் பெற்றது.
பைலட், ரன்வே தேவையில்லை
விமானம் முழுமையாக AI தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், பைலட் இல்லாமல் தானாகவே பறந்து, தாக்குதல் நடத்துதல், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் திறன் இதற்கு உள்ளது. வழக்கமான போர் விமானங்களைவிட குறைந்த செலவில் தயாரிக்கப்படும் இது, எதிர்கால போர் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. தரையில் இருந்து நேராக வானை நோக்கி கிளம்பிச் செல்லும் என்பதால், ரன்வே தேவைப்படாது. எங்கிருந்து வேண்டுமானாலும் கிளம்பிச் செல்ல முடியும்.
எதிர்கால தலைமுறை விமானம்
XQ-58A Valkyrie விமானம் Stealth தொழில்நுட்பம், விரைவான பறக்கும் திறன், தானாகவே முடிவெடுக்கும் AI செயல்பாடுகள் போன்ற பல நவீன அம்சங்களை கொண்டிருக்கிறது. எதிர்கால போர்களில் இத்தகைய விமானங்களே அதிகம் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க : அல்பேனியாவின் AI அமைச்சர் : ஊழலை ஒழிக்க "83 குழந்தைகள்" அதிரடி
பாதுகாப்பு துறையில் புரட்சி
அமெரிக்க விமானப்படை, அமெரிக்க கடற்படை ஆகியவற்றின் Skyborg திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த விமானம் அமெரிக்க பாதுகாப்பு படையில் இடம்பெற இருக்கிறது.
==============